அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை
British people trying back door route to stay in Australia by applying for asylum have been warned: அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காகப் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் மறைமுக வழியை முயற்சிக்கும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
230க்கும் அதிகமான பிரித்தானியர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிகை
அதாவது, அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிப்பதற்காக சிலர் இந்த முறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.
ஆகவே, அப்படி அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிப்பதற்காக புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் பிரித்தானியர்கள் அப்படிச் செய்வதை நிறுத்துமாறு அவுஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் பிரித்தானியர்களும் அயர்லாந்து நாட்டவர்களும், அவுஸ்திரேலியாவில் தாங்கள் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிக்க விரும்பினால், புகலிடம் கோரி விண்ணப்பிக்குமாறு சமூக ஊடகங்களில் ஆலோசனை வழங்கப்படுவதை கவனித்துவருவதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ள நிலையில், அது மிக மோசமான ஆலோசனை என உள்விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இப்படி மோசடி செய்து அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடுகடத்துவதற்காக, கூடுதல் புலம்பெயர்தல் அலுவலர்களை பணியிலமர்த்துவது தொடர்பில், அவுஸ்திரேலிய உள் விவகாரங்கள் அமைச்சரான டோனி பர்க் திட்டமிட்டுவருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |