குளிர்காலம் நெருங்கும் நிலையில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குளிர்காலம் நெருங்கும் நிலையில், பிரித்தானியர்கள் உடல் நலம் தொடர்பில் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குளிர்காலத்தில் வீடுகளில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று பூஞ்சை பரவலாகும். பூஞ்சைகளால் பலருக்கு பலவிதமான உடல் நலப் பிரச்சினைகள் உருவாகலாம்.
பூஞ்சையால் பிரச்சினை ஏற்பட்டு, பிறகு அதை சரி செய்வதற்கு எக்கச்சக்கமாக செலவு செய்வதைக் காட்டிலும், முன்கூட்டியே எடுக்கும் சில நடவடிக்கைகளால் அதை தவிர்க்கலாம் என்கிறார் Nancy Emery என்னும் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்.
வெளியே வானிலை குளிராகவோ மழையாகவோ இருந்தாலும், ஜன்னல்களை திறந்துவைப்பது நல்லது, அதே நேரத்தில் பூஞ்சை வளராமல் தடுப்பதும் அவசியம் என்கிறார் நான்சி.
ஆக, ஒரு நாளைக்கு சில முறை, குளித்த பிறகும், சமைத்தபிறகும், ஜன்னல்களை திறந்துவைப்பது, வீட்டுக்குள் காணப்படும் ஈரப்பதத்தை வெளியேற்ற மிகவும் உதவியாக இருக்கும்.
பூஞ்சைகள், வெதுவெதுப்பான மற்றும் ஈரமான சூழலில் நன்கு பரவக்கூடியவையாகும். ஆகவே, குளிர்காலத்தில் வீட்டை காற்றோட்டமாக வைப்பது நல்லது.
பூஞ்சை பரவலுக்குக் காரணமான சுமார் 75 சதவிகித ஈரப்பதத்தை, ஜன்னல்கள் முதலான ஈரம் படும் இடங்களை உடனடியாக துடைப்பதன் மூலம் தடுக்கலாம்.
அதேபோல, தண்ணீர் படும் இடங்களான குளியலறை, சமையலறையின் தரை, டைல்ஸ் போன்ற இடங்களையும் துடைத்து ஈரத்தை அகற்றுவது நன்மை பயக்கும்.
மேலும், அறை எப்படி இருந்தாலும், டைல்ஸில் படும் ஈரம், அவற்றை தரையில் பதிக்கவும், அவற்றுக்கிடையிலான இடத்தை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்படும் கலவைக்குள் இறங்கி அங்கிருந்தும் பூஞ்சை உருவாக வாய்ப்புள்ளது என்கிறார் நான்சி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |