பல நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைச் சேமிக்க பிரித்தானியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
Brits warned to stock up on days of supplies: எல் நினோ தொடர்பில், பல நாட்களுக்குத் தேவையான பொருட்களைச் சேமித்து வைக்குமாறு பிரித்தானிய மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மிகப்பெரிய எல் நினோ வரவிருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ள நிலையில், சாத்தியமான தேசிய அவசரநிலைகளுக்குத் தயாராகவும், அத்தியாவசியப் பொருட்களைச் சேத்து வைக்கவும் பிரித்தானிய மக்களை அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
இதுவரை கண்டிராத
காலநிலை தொடர்பான பேரிடர் ஏற்பட்டால், சில நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை இருப்பு வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோடைக்காலத்தில் மட்டும் ஐந்து வெப்ப அலைகளை எதிர்கொண்ட நிலையில், பிரித்தானியா கடுமையான குளிர்காலத்தைச் சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேம் ஏஞ்சலா ஈகிள் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை காணப்பட்டதிலேயே மிகப்பெரிய 'எல் நினோ' நிகழ்வை மக்கள் எதிர்கொள்ளவிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ், உலகம் இதுவரை கண்டிராத ஒரு சூழலில் இருப்பதாகக் கூறியதோடு, 'எல் நினோ' நிகழ்வு நம் கண்முன்னே மிகத் தீவிரமடைந்து வருவதாகவும் எச்சரித்ததைத் தொடர்ந்து பிரித்தானிய மக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்துக் கூறி... நேபாளத்தில் இருந்து பெற்றோரின் குரலுக்காக காத்திருக்கும் சிட்னி இளைஞர்
உருவாகி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், பிரித்தானியாவைத் தாக்கக்கூடிய சாத்தியமான சுற்றுச்சூழல் அவசரநிலைகளுக்குத் தயாராக இருக்குமாறும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மக்களைக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை காணப்பட்டதிலேயே மிகப்பெரிய 'எல் நினோ' நிகழ்வை நாம் எதிர்கொள்ளவிருக்கிறோம்; இது நம் நாட்டில் கோடைக்காலங்களில் வறட்சியையும், குளிர்காலங்களில் அதிக மழையையும், அத்துடன் மிகத் தீவிரமான புயல்களையும் உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டேம் ஏஞ்சலா,
இது ஆசியாவில் வெள்ளப்பெருக்கின் மூலம் இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தும்; எனவே, நாம் இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்றார்.
மேலும், அவசரகால சேவையினர் உங்களை வந்தடைவதற்கு முன், சிறிது காலத்திற்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய உணவை நீங்கள் சேமித்து வைத்திருந்தால், அதைச் செய்யாதவர்களை விட நீங்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பீர்கள் என்றார்.
வெப்பமண்டல கிழக்கு பசிபிக் பகுதியில் கடல் நீர் வெப்பநிலை சராசரியை விட 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக உயரும்போது 'எல் நினோ' (El Nino) நிலை அறிவிக்கப்படுகிறது.

சுமார் 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த வானிலை அமைப்பு, உலகளாவிய மழைப்பொழிவு முறைகள் மற்றும் சராசரி வெப்பநிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பசிபிக் பெருங்கடலில் வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்காக வீசும் காற்று வலுவிழக்கவோ அல்லது நின்றுவிடவோ கூடும்; இதனால் வெப்பமான நீர் கிழக்கு நோக்கி நகர முடிகிறது. பின்னர், இந்த வெப்பம் கடலிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்பட்டு, 0.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும்.
எல் நினோ நிகழ்வால் ஏற்படும் வெப்பம் ஏற்கனவே பல்வேறு பகுதிகளைப் பாதித்துள்ளது; இதன்காரணமாக, இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை சராசரிக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளதுடன், ஜூலை மாத நடுப்பகுதி முதல் இந்தோனேசியாவின் சில பகுதிகளில் காட்டுத்தீயும் எரிந்து வருகிறது.
உருவாகியுள்ள எல் நினோ நிகழ்வு 2027-ஆம் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்றும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்துடன் இணைந்து, அடுத்த ஆண்டு இதுவரை பதிவானதிலேயே மிக வெப்பமான ஆண்டாக அமைவதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |