ஐசிசி-யின் உயரிய கௌரவத்தை பெற்றுள்ள மஹிலா ஜெயவர்த்தனே!
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹிலா ஜெயவர்த்தனே, தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஷான் போலக் மற்றும் மறைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை ஜேனட் பிரிட்டின் ஆகியோரை 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்த்து ஐசிசி கௌரவப்படுத்தியுள்ளது.
ஹால் ஆப் ஃபேம் என்பது ஐசிசி அமைப்பால் வழங்கப்படும் உயரிய கௌரவமாகும்.
கிரிக்கெட் விளையாட்டுக்கு பல்வேறு பங்களிப்புகள், சேவைகள், சாதனைகள் புரிந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள்.
ஆண்டுதோறும் ஐசிசி 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் வீரர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹிலா ஜெயவர்த்தனே, தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் ஷான் போலக் மற்றும் மறைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை ஜேனட் பிரிட்டின் ஆகியோரின் பெயர்கள் 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்த்து ஐசிசி கௌரவப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெடில் தனது பேட்டிங் திறமையால் முத்திரை பதித்த ஜேனட் பிரிட்டின், 2017ல் புற்றுநோய் பாதிப்பால் 58 வயதில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேனட் பிரிட்டின், ஐசிசி 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்க்கப்பட்ட 31வது இங்கிலாந்து வீராங்கனை ஆவார்.
இலங்கையின் அடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் பேட்ஸ்மேனாக திகழ்ந்த மஹிலா ஜெயவர்த்தனே, ஐசிசி 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்க்கப்பட்ட 3வது இலங்கை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Janette Brittin, Mahela Jayawardena and Shaun Pollock enter the ICC Hall of Fame!
— ICC (@ICC) November 13, 2021
More on the trio’s induction ? https://t.co/6wsXr79Gmp pic.twitter.com/s2kJfB7yNJ
முரளிதரன், சங்கக்காரா ஆகியோர் ஏற்கனவே ஐசிசி 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆல்-ரவுண்டராக திகழ்ந்த ஷான் போலக், ஐசிசி 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் சேர்க்கப்பட்ட 6வது தென் ஆப்பிரிக்கா வீரர் ஆவார்.