எச்சில் ஊறும் சுவையில் பிரியாணிக்கு வைக்கப்படும் கத்திரிக்காய் கிரேவி: ரெசிபி இதோ
பிரியாணிக்கு கத்தரிக்காய் கிரேவி இல்லையெனில் அந்த உணவு முழுமைப் பெறாது.
என்னதான் ருசியான பிரியாணியாக இருந்தாலும் தொட்டுக்கொள்ள எச்சில் ஊறும் இந்த கத்தரிக்காய் தொக்குதான் அதன் கூடுதல் சுவையே.
எனவே அதை எப்படி வீட்டில் ஈசியாக செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை- 1 ஸ்பூன்
- தேங்காய்- 3 சிறிய துண்டு
- வெங்காயம்- 1
- வெள்ளை எள்ளு- 1 ஸ்பூன்
- சோம்பு- 1/2 ஸ்பூன்
- சீரகம்- 1/2 ஸ்பூன்
- வெந்தயம் -1/4 ஸ்பூன்
- மிளகு- 1/2 ஸ்பூன்
- தக்காளி- 1
- புளி- சிறிய துண்டு
- கத்திரிக்காய்- 1/4kg
- எண்ணெய்- தேவையான அளவு
- கடுகு- 1
- கருவேப்பிலை- 1 கொத்து
- பச்சைமிளகாய்- 2
- இஞ்சி பூண்டு- 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வேர்க்கடலை, தேங்காய், நறுக்கிய வெங்காயம், வெள்ளை எள்ளு, சோம்பு, சீரகம், வெந்தயம், மிளகு சேர்த்து வதக்கவும்.
வதக்கிய பின் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் புளி சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். இதனை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவேண்டும்.
பின் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து முழு கத்திரிக்காயை கீறி எண்ணெயில் நன்கு பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
கத்திரிக்காய் கிரேவி செய்ய 5 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு,சோம்பு, சீரகம், வெந்தயம், மிளகு கருவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் 50g வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கி அதில் அரைத்து வைத்திருந்த கலவையை சேர்த்து மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், காரா மசாலா சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
இறுதியாக அதில் கத்திரிக்காய் சேர்த்து 15 நிமிடம் கொதித்த எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கினால் சுவையான கத்திரிக்காய் கிரேவி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |