லண்டனில் பட்டப்பகலில் சிறுமிக்கு நேரவிருந்த அசம்பாவிதம்: புகைப்படம் வெளியிட்ட அதிகாரிகள்
லண்டனில் பட்டப்பகலில் 11 வயது பாடசாலை சிறுமியைக் கடத்த முயன்ற நபர் தொடர்பில் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.
இரு ஆண்களிடம் விசாரணை
கண்காணிப்பு கமெரா பதிவுகளை வெளியிட்டுள்ள பொலிசார், இந்த விவகாரம் தொடர்பில் இரு ஆண்களிடம் விசாரணை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Image: Met Police
சம்பவத்தின் போது வழிபோக்கர் ஒருவர் தலையீட்டால் அந்த சிறுமி தப்பியதாகவே பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. தென்கிழக்கு லண்டனின் ப்ரோம்லி பகுதியில் ஜூன் 24ம் திகதி பகல் சுமார் 11.45 மணியளவில் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது.
நடந்து சென்ற 11 வயது சிறுமியை நபர் ஒருவர் அணுகியுள்ளார். அவருடன் அழைத்துச் செல்ல அந்த சிறுமியை அந்த நபர் கட்டாயப்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் ஒரு வழிப்போக்கர் குறித்த சிறுமி தயக்கத்துடன் அசௌகரியமாக இருப்பதைக் கண்டு, சமயோசிதமாக செயல்பட்டு அந்த சிறுமியை அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளார்.
Image: Met Police
தற்போது இரண்டு ஆண்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார், அந்த விவகாரம் தொடர்பில் இவர்களை விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இவர்களை அடையாளம் காணும் பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளை நாட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் பெயர் அல்லது இவர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |