பழைய உடைந்த பூந்தொட்டிக்கு எழுந்த போட்டி., ரூ.2 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
பிரித்தானியாவில் உடைந்த பூந்தொட்டியொன்று இலங்கை பணமதிப்பில் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
பிரித்தானியாவில் ஒரு பூங்காவில் மறந்துவிடப்பட்ட நிலையில் கிடைத்த ஒரு பழைய, உடைந்த பூந்தொட்டி ஒன்று 66,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்பனையானது.
முதலில் வெறும் ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் (இலங்கை பணமதிப்பில்) வரை மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்ட இந்த பானை, ஏலத்தில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக மிகப்[பாரிய தொகைக்கு விற்கப்பட்டது.
இந்த பானையின் சிறப்பு என்ன?
இந்த 4 அடி உயரமுள்ள கல் வகை பானை 1964-ஆம் ஆண்டு பிரபல ஜேர்மன் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய கலைஞர் Hans Coper உருவாக்கியது.
அவர் இரண்டாம் உலகப் போர் போது ஜேர்மனியை விட்டு தப்பித்து இங்கிலாந்திற்கு வந்தவர். பின்பு லண்டனில் உள்ள Camberwell School of Arts-இல் கற்பித்தார்.
Coper உருவாக்கிய இந்த பானை அவரது மிக மதிப்புமிக்க கலைப்பணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பானையின் பயணம்தான் அதிசயம்!
பானையின் உரிமையாளர் இறந்த பிறகு, அந்த வீட்டை பெற்ற பிள்ளைகள் பானையின் முக்கியத்துவத்தை உணர்ந்து Chiswick Auctions நிறுவனத்தை அழைத்தனர்.
அவர்கள் மூலம் Hans Coper உருவாக்கிய மாஸ்டர் பீஸாக இது கண்டறியப்பட்டது. சிறிது முறிந்த நிலையில் இருந்தாலும், கீழ்பகுதியில் இருந்த முத்திரை அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியது.
“இது Hans Coper என்பவரின் புகழை மேலும் உயர்த்துகிறது. உடைந்த நிலை இருந்தும் இத்தனை பெரும் தொகைக்கு விற்பனை ஆனது அவரது மதிப்பைச் சொல்கிறது,” என ஏல நிறுவன பிரதிநிதி மக்சின் வின்னிங் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |