சுவிஸ் ஏரியின் கீழ் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியம்
சுவிஸ் ஏரி ஒன்றின்கீழ், வெண்கல யுக கிராமம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள்.
Lucerne ஏரியின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த கிராமம், 3,000 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இயற்கைத் துறைமுகப்பகுதி ஒன்றில் குழாய்கள் பதிக்கும் பணியின்போது இந்த கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் மட்டத்திலிருந்து நான்கு அடி ஆழத்தில் இந்த கிராமத்தின் எச்சங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த பகுதியில் ஒரு குடியிருப்பு உண்டு என்பதை அறிந்திருந்த தொல்பொருள் ஆய்வாளர்கள், அதற்கான ஆதாரத்தை தேடிக்கொண்டிருந்தார்கள். ஏரியின் அடியில் எக்கச்சக்கமான சேறு இருந்ததால் சரிவர ஆதாரங்களைக் கண்டுபிடிக்க அது தடையாக இருந்தது.
தற்போது குழாய் பதிக்கும் பணிக்காக ஏரிக்கடியில் தோண்டும்போது வீடுகள் அமைக்க பயன்பட்ட 30 பொருட்களும் ஐந்து பானைகளும் கிடைத்துள்ளன. இந்த கண்டுபிடிப்புகள், Lucerne ஏரியின் அடியில் ஒரு கிராமம் இருந்ததை உறுதி செய்துள்ளன.