Brooklyn Nine-Nine ஆங்கில தொடரில் நடித்த ஆண்ட்ரி ப்ராஹர் மரணம்
உலகப் புகழ்பெற்ற தொடரான ‘ப்ரூக்ளின் 99' ஆங்கில தொடரில் நடித்த ஆண்ட்ரி ப்ராஹர் (Andre Braugher) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
Andre Braugher
பிரபல ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரான ‘ப்ரூக்ளின் 99’ உலகம் முழுவதும் புகழ் பெற்றது. இந்த தொடரில் கேப்டன் ஹோல்ட் எனும் பாத்திரத்தில் நடித்து சிரிக்க வைத்த ஆண்ட்ரி ப்ராஹர் (61) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
ஆண்ட்ரி ப்ராவர், சிகாகோவில் பிறந்தவர். இவர், ஹோமிசைட் லைஃப் ஆன் த ஸ்ட்ரீட், ப்ரூக்ளின் 99 ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர். மேலும், தொலைக்காட்சி தொடர்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான எம்மி விருதினை இரண்டு முறை பெற்றுள்ளார்.
முக்கியமாக ‘ப்ரூக்ளின் 99’ தொடரில் ‘கேப்டன் ரேமண்ட் ஹோல்ட்’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.
“Pain. That’s the feeling I’m feeling” 😣
— Jake Peralta (@3asy1ce) December 13, 2023
Rest in Peace, Captain Raymond Holt! You’ll forever hold a special place in my heart 💔 #NineNine #AndreBraugher pic.twitter.com/AfkzPS6gZy
இந்நிலையில், ஆண்ட்ரி ப்ராவர் உயிரிழந்த செய்தியறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவரின் மறைவிற்கு பலரும் இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |