வாஸ்து: வீட்டில் துடைப்பத்தை இந்த திசையில் வைத்தால் பணகஷ்டம் வருமாம்!
இந்து மதத்தின் படி, துடைப்பம் லட்சுமி தேவியின் சின்னம் என்று கூறப்படுகிறது.
வாழ்க்கை நிலைக்கும் வீட்டில் துடைப்பத்தை வைக்கும் திசைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, துடைப்பத்தை வாஸ்துப்படி சரியான திசையில் வைக்க வேண்டியது அவசியம்.
வீட்டில் ஈசானிய மூலை, அக்னி மூலை, நிருதி மூலை மற்றும் குபேர மூலை என நான்கு திசைகள் உள்ளன.
ஆனால், தெற்கு மற்றும் மேற்கு இடையே துடைப்பத்தை வைப்பது மிகவும் பொருத்தமானதாக கருதப்படுகிறது.
அதேபோல், துடைப்பத்தை செங்குத்தாக நிற்க வைக்க கூடாது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
துடைப்பத்தை முகம் எப்போதும் கிழக்கு நோக்கி வைப்பது அதிக பலன்களைத் தரும்.
முதலில் காலையில் எழுந்ததும், வீட்டை துடைப்பதற்கு முன், முதலில் இறைவனை வணங்க வேண்டும். இதன் பிறகு வீட்டை துடைக்கவும்.
அதேபோல், வீட்டை அடிக்கடி துடைப்பத்தால் பெருக்கி, துடைத்துக்கொண்டே இருப்பது தவறு என கூறப்படுகிறது.
வீட்டை சுத்தம் செய்யும்போது, மேற்கு அல்லது வடக்கு திசையில் இருந்து துடைக்கத் தொடங்குங்கள்.
இதனால், உங்கள் வீட்டில் லட்சுமி தங்குவதோடு, லட்சுமியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
அதேசமயம், துடைத்த பின் குப்பைகளை ஆங்காங்கே குவித்து வைத்தால், வறுமையும் கஷ்டங்களும் அதிகரித்துக் கொண்டே போகும்.
வீட்டில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், உடனே துடைக்கக் கூடாது. இது வேலையில் வெற்றியை பாதிக்கும்.
சனிக்கிழமை துடைப்பம் வாங்குவது நல்ல பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. மேலும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துடைப்பம் வாங்க வேண்டாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |