விபத்தின்போது உதவியவர்களுக்கு சொத்தையே எழுதிக்கொடுத்த பிரித்தானிய அண்ணனும் தங்கையும்...
விபத்து ஒன்றின்போது, தங்களை நன்றாக கவனித்துக்கொண்ட மருத்துவ அமைப்பு ஒன்றிற்கு தங்கள் சொத்தையே எழுதிக்கொடுத்துள்ளனர் அண்ணன் தங்கையாகிய பிரித்தானியர்கள் இருவர்.
ட்ராக்டர் விபத்து
வேல்ஸ் நாட்டில் Corwen என்னுமிடத்தில் வாழ்ந்தவர்கள் அண்ணன் தங்கையான சார்லசும் (Charles Tryweryn Davies, 92) பெக்கி என்னும் மார்கரட்டும் (Margaret Eunice Davies, 89).
சார்லஸ் ட்ராக்டர் விபத்து ஒன்றை சந்தித்துள்ளார். அப்போது, ஏர் ஆம்புலன்ஸ் தொண்டு நிறுவனம் ஒன்று அவரை மிக நன்றாக கவனித்துக்கொண்டுள்ளது.
FAMILY PHOTO
சார்லசுடைய நண்பரான ராபர்ட்ஸ் (Merfyn Roberts) என்பவர், தன்னிடம் சார்லஸ் அந்த விபத்து குறித்து கூறியதுண்டு என்றும், தன்னை அந்த ஏர் ஆம்புலன்ஸ் தொண்டுநிறுவனம் மிகச் சிறப்பாக கவனித்துக்கொண்டதாகவும், தான் எப்போதுமே அந்த தொண்டு நிறுவனத்துக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் கூறியதாகவும் தெரிவிக்கிறார்.
ஆனால், சார்லசும் அவரது தங்கை பெக்கியும் மரணமடையும் வரை, அவர்களுடைய திட்டம் குறித்து யாருக்கும் தெரியாது என்றும் கூறுகிறார்.
WALES AIR AMBULANCE
உயில் எழுதிவைத்துள்ள அண்ணனும் தங்கையும்
வாழும்போது எளிமையாக வாழ்ந்ததுடன், சமுதாயத்துக்கு பல உதவிகளும் செய்த சார்லசும் பெக்கியும் இறந்தபிறகுதான், அவர்கள் தங்கள் எஸ்டேட்டின் பெரும்பகுதியை, தங்களுக்கு உதவிய ஏர் ஆம்புலன்ஸ் தொண்டு நிறுவனத்துக்கு எழுதிவைத்துள்ளது தெரியவந்துள்ளது.
சுமார் 1.3 மில்லியன் மதிப்பிலான அவர்களுடைய நன்கொடை, ஏராளமானோருக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர், வேல்ஸ் ஏர் ஆம்புலன்ஸ் அமைப்பினர்.
சார்லசும் பெக்கியும் இவ்வளவு பெரிய உதவியைச் செய்துள்ள நிலையில், அவர்கள் உயிரோடிருக்கும்போது அவர்களைக் குறித்து நாங்கள் தெரிந்துகொள்ளாமல் போனது வெட்கத்திற்குரியதுதான் என்கிறார்கள் அந்த தொண்டு நிறுவனத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |