அனில் அம்பானிக்கு உதவ ரூ 4,000 கோடி திரட்டும் சகோதரர்கள்... அவர்கள் குவித்துள்ள சொத்து மதிப்பு
முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியின் கடனில் தத்தளிக்கும் நிறுவனத்தை வாங்கும் பொருட்டு, 4 சகோதரர்கள் ரூ 4,000 கோடி தொகையை திரட்டி வருவதாக தகவல் உறுதியாகியுள்ளது.
ரிலையன்ஸ் கேபிடல்
அனில் அம்பானியின் கடனில் மூழ்கியுள்ள ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தை ரூ 9,650 கோடிக்கு கைமாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
வணிகத்துறையில் பிரபலமான இந்துஜா குழுமத்தின் துணை நிறுவனமான IIHL என்ற நிறுவனமே, ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தை வாங்கும் போட்டியில் வென்றுள்ளது.
ஆனால் ஒப்பந்தத்தை முடிக்க, பணம் திரட்டுவதில் அவர்கள் தடங்கல்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அறியப்படும் வணிக குழுமங்களில் ஒன்று இந்துஜா குழுமம்.
வங்கித்துறை, வாகனம், ஊடகம் உட்பட பல வணிகங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்துஜா சகோதரர்கள் என அறியப்படும் ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ் மற்றும் அசோக் ஆகிய நால்வர் தற்போது சுமார் ரூ 4,000 கோடி தொகையை திரட்டும் முடிவில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
1914ல் பரமானந்த் தீப்சந்த் ஹிந்துஜா என்பவரால் நிறுவப்பட்ட இந்துஜா குழுமம், தற்போது அவரது பிள்ளைகள் நால்வரால் முன்னெடுக்கப்படுகிறது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்துஜா குடும்பத்தின் சொத்து மதிப்பு என்பது ரூ 166,110 கோடி என்றே கூறப்படுகிறது.
இந்துஜா குழுமம் ஐரோப்பாவுக்கு
தற்போது ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தை கையகப்படுத்தும் பொருட்டு ரூ 4,000 கோடி கடனாக வாங்க முயற்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்துஜா சகோதரர்களில் மூத்தவர் 2023 மே மாதம் மரணமடைய, தற்போது கோபிசந்த் இந்துஜா தலைவராக உள்ளார்.
1979 வரையில் இந்துஜா குழுமத்தின் தலைமையகம் ஈரான் நாட்டில் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் அந்த நாட்டில் புரட்சி வெடிக்கவும், இந்துஜா குழுமம் ஐரோப்பாவுக்கு இடம் மாறியது.
தொடர்ந்து தங்கள் ஏற்றுமதி வணிகத்தை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, சகோதரர்கள் லண்டனுக்கு குடியேறினர். ஆனால் பிரகாஷ் இந்துஜா மட்டும் சுவிட்சர்லாந்தில் இருந்து வணிகத்தை கவனித்து வருகிறார்.
இந்துஜா குழுமத்திற்கு உலகம் முழுக்க பல நாடுகளில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. 200,000 மேற்பட்டவர்கள் பணியாற்றியும் வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |