விஜய் மல்லையாவின் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனத்தை வாங்கிய சகோதரர்கள்... இன்று பல ஆயிரம் கோடி வருவாய்
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து நஷ்டத்தில் இயங்கிய நிறுவனத்தை வாங்கி, சகோதரர்கள் இருவர் இந்தியாவின் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியுள்ளனர்.
பெயிண்ட் உற்பத்தியாளராக
திங்க்ரா சகோதரர்கள் என அறியப்படும் குல்தீப் சிங் திங்ரா மற்றும் குர்பச்சன் சிங் திங்க்ரா ஆகிய இருவருமே Berger Paints நிறுவனத்தை இந்தியாவின் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியவர்கள்.
2023ல் மட்டும் Berger Paints நிறுவனத்தின் வருவாய் என்பது ரூ 10,619 கோடி என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, இந்தியாவின் இரண்டாவது பெரிய பெயிண்ட் உற்பத்தியாளராகவும் உயர்ந்துள்ளனர்.
மேலும், ரஷ்யா, போலந்து, நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்நிறுவனம் செயல்படுகிறது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் திங்க்ரா சகோதரர்களின் மொத்த சொத்து மதிப்பு என்பது ரூ 68,467 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
திங்க்ரா சகோதரர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் தங்கள் கல்வியை முடித்த பின்னர், குடும்ப தொழிலையே விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் புதிய கடைகளைத் திறக்க முடிவு செய்தனர்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கவனம்
1970களில் இந்த கடைகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ 10 லட்சம் வரையில் வருவாய் ஈட்டியுள்ளனர். படிப்படியாக வெளிநாடுகளில் தொழிலை விரிவுபடுத்த தொடங்கினர்,
இதனால் 1980களில் ஆண்டுக்கு ரூ. 300 கோடி மதிப்பிலான வணிகத்துடன் சோவியத் யூனியனுக்கு பெயிண்ட் ஏற்றுமதியில் மிகப்பெரிய நிறுவனமாக மாறியது.
இந்த நிலையில் 1990களில் விஜய் மல்லையா வசமிருந்த பிரித்தானிய நிறுவனமான Berger Paints நிறுவனத்தினை திங்க்ரா சகோதரர்கள் சொந்தமாக்கினர். இருவரின் கடின உழைப்பு மற்றும் திட்டமிடல் காரணமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கவனம் பெறத் தொடங்கினர்.
தற்போது Berger Paints நிறுவனத்தை இளம்தலைமுறையினர் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |