சகோதரர்கள் இருவர் உருவாக்கிய ரூ 30,000 கோடி நிறுவனம்... நாளுக்கு ரூ 53 லட்சம் வருவாய்: அவர்களின் சம்பளம்?
பங்கு வர்த்தகம் மற்றும் முதலீடு நிறுவனமான Zerodha, துவங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஒரு புரட்சிகர தளமாக மாறியுள்ளது.
சம்பளமாக மொத்தம் ரூ 195.4 கோடி
கடந்த 2010ல் சகோதரர்களான நிதின் மற்றும் நிகில் காமத் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் வழக்கமான தரகு வணிகத்தை மொத்தமாக ஆட்டம் காண வைத்தது.
தற்போது 2022 மற்றும் 2023 நிதியாண்டில் சகோதரர்கள் இருவரும் தங்கள் சம்பளமாக மொத்தம் ரூ 195.4 கோடி அளவுக்கு பெற்றுக்கொண்டுள்ளனர்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், Zerodha நிறுவனர்கள் மற்றும் முழு நேர இயக்குநர்களாக செயல்படும் சகோதரர்கள் இருவரும் அடிப்படை சம்பளம், போனஸ், கமிஷன், ஊக்கத்தொகை, இதர சலுகைகள் உட்பட ஆண்டுக்கு தலா ரூ 72 கோடி பெறுகின்றனர்.
ஆனால் நிதியாண்டு 2022ல் Zerodha நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இயக்குநர்கள் மூவரும் ஆண்டுக்கு தலா ரூ 100 கோடி வரையில் சம்பளம் உள்ளிட்ட சலுகைகளுடன் பெற்றுக்கொள்ளலாம் என்றே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மொத்த சொத்து மதிப்பு ரூ 45,882 கோடி
மேலும், Zerodha நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் சம்பளமும் 2023 நிதியாண்டில் 35.7 சதவீதம் அதிகரித்து ரூ 623 கோடி என உயர்ந்துள்ளது. 2022 நிதியாண்டில் மொத்த ஊழியர்களுக்கான சம்பளமானது ரூ 459 கோடி என்றே இருந்துள்ளது.
Zerodha நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இயக்குநர்கள் உட்பட மொத்தம் ரூ 380 கோடி சம்பளம் வழங்கியது. சகோதரர்களான நிதின் மற்றும் நிகில் காமத் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு என்பது இந்திய மதிப்பில் ரூ 45,882 கோடி என்றே கூறப்படுகிறது.
இதில் நிதின் காமத்தின் சொத்து மதிப்பு ரூ 22,523 கோடி என்றும் நிகில் காமத்தின் சொத்து மதிப்பு ரூ 9,176 கோடி என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |