இளம்வயதில் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்த இரு சகோதரர்கள்... மலைக்கவைக்கும் சொத்து மதிப்பு
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 30 வயதுக்கு உட்பட்ட 25 பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மும்பையில் குடியிருக்கும் சகோதரர்கள் இருவர் இணைந்துள்ளனர்.
இந்திய மதிப்பில் ரூ 81,631 கோடி
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி என்பவரின் மகன்களே உலகின் இளம்வயது பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள்.
ஜஹான் மிஸ்திரி மற்றும் ஃபிரோஸ் மிஸ்திரி ஆகிய இருவரின் மொத்த சொத்து மதிப்பு 9.8 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரிய வந்துள்ளது. அதாவது இந்திய பண மதிப்பில் ரூ 81,631 கோடி.
25 வயதான ஜஹான் மற்றும் 27 வயது ஃபிரோஸ் ஆகியோர் மறைந்த தங்கள் தந்தையின் சொத்தில் உரிமையாளராகியுள்ளனர். கடந்த 2022ல் சாலை விபத்தில் சிக்கி சைரஸ் மிஸ்திரி மரணமடைந்தார்.
அயர்லாந்து குடிமக்களான ஜஹான் மிஸ்திரி மற்றும் ஃபிரோஸ் மிஸ்திரி சகோதரர்கள் தற்போது மும்பையில் தங்கி, தங்கள் குடும்ப தொழிலை கவனித்து வருகின்றனர். சுமார் இரண்டு ஆண்டு காலம் தங்கள் குடும்ப நிறுவனங்களின் பல துறைகளில் பணியாற்றிய பின்னர், 2022 டிசம்பர் மாதம் முதல் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
19 வயது, சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டொலர்
ஜஹான் மிஸ்திரி யேல் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்துள்ளார், அவரது சகோதரர் ஃபிரோஸ் மிஸ்திரி வார்விக் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான 25 இளம்வயது பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் 33 வயதுக்கு உட்பட்டவர்களே. இவர்கள் அனைவரின் மொத்த சொத்து மதிப்பு என்பது ரூ 9 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது.
இந்த 25 பேர்களில் பெரும்பாலானோர் தங்களின் குடும்ப சொத்தில் பங்கு பெற்றவர்கள் என்றே குறிப்பிட்டுள்ளனர். இதில் மிகவும் இளம்வயது பெரும் கோடீஸ்வரராக தெரிவாகியுள்ளவர் பிரேசில் நாட்டின் 19 வயது லிவியா என்பவரே. இவரது சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |