தித்திக்கும் சுவையில் Chocolate Brownie.., வீட்டிலேயே செய்வது எப்படி?
இந்த சுவையான Chocolate Brownieஐ குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் Chocolate Brownieஐ வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- Chocolate Chips- 200g
- உப்பு இல்லாத வெண்ணெய்- 100g
- முட்டை- 3
- சர்க்கரை- 300g
- எண்ணெய்- ¼ கப்
- வெண்ணிலா எசன்ஸ்- 1 ஸ்பூன்
- மைதா- 1 கப்
- கோகோ பவுடர்- ½ கப்
- உப்பு- 2 சிட்டிகை
- பாதாம்- 10
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் உருக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் அதில் 150g Chocolate Chips சேர்த்து வெண்ணெய் இருக்கும் சூட்டிலே கலந்தால் நன்கு உருகி வந்துவிடும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதனுடன் வெண்ணெயில் கரைத்து வைத்த சாக்லேட், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்னர் இதில் மைதா, கோகோ பவுடர், உப்பு ஆகியவற்றை சலித்து சேர்த்து கலந்து எடுத்துகொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து அதில் 50g Chocolate Chips சேர்த்து கெட்டியாக நன்கு கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக அதன் மேல் நறுக்கிய பாதாம் சேர்த்து ஓவன் அல்லது குக்கரில் அரை மணி நேரம் வேகவைத்து எடுத்தால் சுவையான Chocolate Brownie தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |