ஒரு பாடலுக்கு ரூ 20 கோடி சம்பளமாக வாங்கிய பாடகர் ரூ 400 கோடி கடனாளியா... வெளியான பின்னணி
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தை சேர்ந்த பாப் இசைக்கலைஞர் Bruno Mars 21ம் நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர்.
சுமார் ரூ 400 கோடி
அமெரிக்காவில் அவரது பாடல்கள் 6 முறை வைர சான்றிதழ் பெற்றுள்ளது. தற்போது 38 வயதேயாகும் பாடகர் ப்ருனோ மார்ஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வெளியான தரவுகளின் அடிப்படையில் மார்ஸ் தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ 400 கோடி) அளவுக்கு கடனில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அவரது சூதாட்ட பழக்கத்தால் இந்த கடன் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. 2016ல் ஆண்டுக்கு 90 மில்லியன் டொலர் ( ரூ 720 கோடி) மதிப்பிலான பல ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் ஒன்றை லாஸ் வேகஸில் செயல்பட்டு வரும் MGM Casino என்ற நிறுவனத்துடன் முன்னெடுத்திருந்தார்.
ஒரு பாடலுக்கு 20 கோடி
ஆனால் தனது சூதாட்ட பழக்கத்தால் MGM Casino நிறுவனத்திற்கு அவர் பல மில்லியன் டொலர் கடனாளியாகியுள்ளார். MGM Casino நிறுவனத்தில் நிகழ்ச்சி முன்னெடுக்கும் மார்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு இரவுக்கும் 1.5 மில்லியன் டொலர் (ரூ 12 கோடி) கட்டணமாக வசூலித்து வந்துள்ளார்.
வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் ப்ரூனோ மார்ஸின் மொத்த சொத்து மதிப்பு என்பது 175 மில்லியன் டொலர் (ரூ 1400 கோடி). அத்துடன், உலகின் எந்த நாட்டில் இசை விருந்து நடத்தப்பட்டாலும், ஒரு பாடலுக்கு சுமார் 20ல் இருந்து 28 கோடி கட்டணமாக வசூலித்தும் வருகிறார்.
ஆனால் MGM Casino நிறுவனத்திடம் அவர் கடனாளியாக இருப்பதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்று அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
You May Like This Video