மகத்தான கலைஞனின் மர்ம மரணம் இதுதான் காரணமா ?
நாம் வாழும் இந்த உலகம் ஏராளமான மனிதர்களின் பிறப்பை தினம் தினம் ஏற்றுக்கடந்து செல்லுகிறது ஆனால் அந்த பிறப்புகளில் அவர்களின் மரணத்தின் பின்னும் காலச்சரித்திரத்தின் பக்கங்களில் நிலைத்து நிற்பவர்கள் மிகச் சிலரே. அந்த வரிசையில் ஒருவர்தான் அசாத்தியங்களை சாத்தியமாக்கிய ஆசிய சூப்பஸ்ரார் புரூஸ்லி.
இந்தப்பெயரை அறியாதவர்கள் யாருமே இருந்துவிடமுடியாது ஏன் என்றால் அந்த அளவு தன்னுடைய அசாத்தியமான திறமைகளால் ரசிக மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்ட அற்புதமான கலைஞர் இவர் என்று அறுதியிட்டுச்சொல்லிக்கொள்ளுவதே காலப்பொருத்தம்.
யார் இந்த புரூஸ்லி இவர் ஏன் இவ்வளவு அதிகம் பேசப்படுகிறார்?
குக் கிராமம் ஒன்றில் பிறந்த சிறுவன் முழு உலகின் பார்வையும் தன்னை நோக்கி திருப்பினான் என்று சொன்னால் அது வேறு யாருமல்ல புரூஸ்லிதான் ஆம் மனித மனங்கள் எங்கெல்லாம் பரவியிருந்நதோ அங்கெல்லாம் புரூஸ்லியின் மீதான ஈர்ப்பும் இருந்துகொண்டே இருந்தது.
பழங்கால மரபுகளில் சிக்கி இன்னாருக்கு இதுதான் அவர்களால் மாத்திரமே என்று இந்த உலகம் கட்டமைத்து வைத்திருந்த இரண்டு பெருஞ்சுவர்களை தகர்த்து தன்னால் முடியும் என்ற விடயத்தை நிரூபித்த அந்த மகத்தான கலைஞனின் நினைவுதினம் இன்று.
காலத்தின் கட்டளைப்படியோ என்னவோ எங்கோ பிறந்து எல்லோரையும் கட்டியீர்ப்பதற்காவே இவரை தன்னுடைய நாட்டிலிருந்து புலம்பெயர செய்ததா இந்த உலகத்தின் இயங்கியல் என்பதே பலரின் சந்தேகம்.
ஆம் நாம் ஆரம்பத்தில் கூறியது போலதான் இது இவர்களுக்கு என்று இந்த உலகம் இறுக்கமாக கடைப்பிடித்து வந்த இரண்டு விடயங்களை அதன் பழங்கால மரபுகளைத்தகர்நதெறிந்தார் புரூஸ்லி ஒன்று அமெரிக்க திரைத்துறையில் இன்னொரு நாட்டைச்சேர்ந்த அமெரிக்க தேசியமல்லாத ஒருவரின் வருகையும் புகழ்பெறுகையும் இன்னொன்று சீனர்களுக்குள் மாத்திரமே சிக்குண்டு கிடந்த சீன தற்காப்புக்கஙலைகள் இந்த பரந்து விரிந்த உலகத்தின் எல்லா நாட்டவர்களுக்கும் இனத்தவர்களுக்குமாக திறந்துவிடப்பட்டது அதனை திறந்துவிட்டவர்தான் புரூஸ்லி.
கேட்க கேட்க கேட்கவேண்டும் பார்க்கவேண்டும் தெரிந்துகொள்ளவேண்டும் இப்படி நம்மில் இயற்கையாக உண்டாகும் ஒருவகை ஆவல் புரூஸ்லி போன்ற மகத்தான கலைஞர்களின் வாழ்க்கைச்சம்பவங்களை தேடவைக்குமல்லவா.
அப்படிப்பட்ட தேடலுள்ள ஒவ்வொருவருக்குமான தீனியாக இனிவரும் சிலவிடயங்களை பார்க்கலாம்
தன்னுடைய பதின்ம வயதுகளில் கொங்கொங் நாட்டில் இயங்கிக்கொண்டிருந்த மோதல்களுக்கான குழுவொன்றில் இணைந்துகொள்கிறார் துரதிஸ்ரவசமாக அந்த குழு மீதே ஏனைய பலம்பொருந்திய குழுக்களின் மீதான பார்வை இருந்துருக்கிறது இதனால் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளான குழும உறுப்பினர்களில் இவரும் ஒருவர் அதன் பிண்ணணியிலையே தன்னைக்காத்துக்கொள்ள தற்காப்புக்கலையின் தேவையை உணர்ந்துகொள்கிறார் புரூஸ்லி அந்த நாட்களின் பட்டறிவே இந்த உலகத்துக்கு ஒப்பற்ற தற்காப்புக்கலை வீரனை வழங்கியது.
இப்படியாக குழு மோதல்கள் பிறருடணான சண்டைகள் என நகர்ந்துகொண்டிருந்த புரூஸ்லி ஒருநாள் கொங்கொங் நாட்டில் அதிகாரம் மிக்க நபரொருவரின் மகனிடம் தன் பலத்தை நிரூபித்திகிறார் இதன் பலாபலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயமாயிற்று இந்நிலையிலையே இவர் அமெரிக்காவுக்கு புலம்பெயரத்தேவையாயிற்று.
எது எப்படியிருந்தாலும் உள்ளூருக்குள் ஒரு சண்டைக்காறனாக இருந்து வந்தவரை இந்த உலகத்துக்கான சுப்பஸ்ரார் ஆக்கிக்கொள்ளுவதற்கு காரணமாக அடித்தளமாக அமைந்தது என்றே சொல்லலாம்.
புரூஸ்லி ஒரு சண்டைக்காறர் என்றுதான் நாம் அறிந்திருப்பதுண்டு ஆனால் அவர் ஒரு நடன ஜாம்பவான் , மெய்யிலாளர் ,திரைப்பட நடிகர் ,தயாரிப்பாளர் , தற்காப்பு கலை பயிற்றுவிப்பாளர் , மற்றும் ஊடகவியலாளர் என்பதோடு விளக்கவுரைஞராக கூட இருந்துருக்கிறார் அப்படியாக சண்டைக்களங்களில் கொதித்துக்கொண்டிருந்த புரூஸ்லி சம நேரத்தில் கொங்கொங்கின் சாசா என்ற வகை நடனத்துலும் கூட தேர்ச்சிபெற்றவராக தன்னைஉருவாக்கிக்கொண்டார்.
அதன்மூலமாக புலம்பெயர்வுக்காலங்களில் அந்த கலை நுட்பங்களை இன்னும் சிலருக்கு கற்பித்து தனக்கான வாழ்வாதார வழிகளைக கூட உருவாக்கிக்கொண்டாராம்.
இப்படியாக இருக்கும்போது நாம் ஏற்கனவே கூறியது போல சீன தற்காப்புக்கலைகளை ஏனையவர்களுக்கு கற்றத்தரக்கூடாது என்ற சீனாவின் பழமைவாதிகளின் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்ட இவர் இதுவிடயம் தொடர்பில் போட்டியொன்றில் பங்குபற்றி இன்னொரு வீரனை வெற்றிகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார் அதாவது குறித்த போட்டியில் தோற்றால் சீனர்களைத்தவிர வேறு யாருக்கும் தற்காப்புகலையை கற்றுக்கொடுக்க கூடாது இதுதான் நிபந்தனை.
ஆனால் அவர்களின் நிபந்தனைகளை மண் கவ்வச்செய்யும் விதமாக மூன்றே நிமிடங்களில் எதிராளியை தோற்கடித்து தன்னை நிரூபித்ததோடு தனது கலையை ஏனையவர்களுக்கு திறந்துவிட ஓப்புதல்களையும் பெற்றுக்கொண்டார்.
ஆனால் அந்த வெற்றியின் பின்னரே தான் இன்னமும் பழமைவாத தற்காப்பு கலையில் தங்கியிருப்பதையும் எதிராளியை வீழ்த்த மூன்று நிமிடங்கள் எடுத்ததையும் எண்ணி நவந்துகொண்டார்.
அதன் பின்னரே புதிய தற்காப்புக்கலை மரபொன்றை தனித்துவமான முறையில் உருப்பெறச்செய்தார் புரூஸ்லி இப்படியாக தன்னை ஒரு இரும்பு மனிதனாக இந்த உலகத்தின் மிகச்சிறந்த தற்காப்பு கலைஞனாக , பயிற்றுவிப்பாளராக , நடிகராக ,தயாரிப்பாளராக , இன்னும் பல்பரிமானத்தன்மைகளில் வரித்துக்கொண்டு மிக்க்குறுகிய காலத்திலையே கோடான கோடி ரசிகமனங்களில் சிம்மாசனமிட்டுக்கொண்டவர்.
தனது 32 வது வயதில் யாருமே எதிர்பாராத தருணமொன்றில் மர்மமான முறையிலையே மரணமடைந்தார் அசாத்தியங்களை சாத்தியமாக்கிய அந்தக்கலைஞனின் அகால மரணம் ஆயிரமாயிரம் சந்தேகங்களையும் கேள்விகளையும் கொண்டதாக மிக நீண்டகாலங்களாக தொடந்து வந்துகொண்டே இருந்தது.
ஒரு தன்னிகரற்ற கலைஞனாக தன் வேகத்தினாலும் வலிமையினாலும் பரந்து விரிந்த உலகின் எட்டுத்திசைகளிலும் வாழ்ந்த மக்களையும் வாய்பிளந்து பார்த்துக கொண்டிக்க செய்த மா கலைஞனின் மரணம் கூட அப்படியாகவே முடிந்துபோனது
இன்று வரை புரூஸ்லியின் ஒன் இன்ச் பஞ்ச் என்று சொல்லப்படுகின்ற , இரண்டு விரல்களால் புஷ் அப் செய்வது என்ற பயிற்சிமுறை இன்றளவும் யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாகவே இருந்துவருகிறது
வலிமையின் அடையாளமாக இரும்புமனிதரா இவர் என்று வொண்டாடப்பட்ட புரூஸ்லி கடந்த . 1973-ம் வருடம் இதே போன்ற நாளொன்றில் தனது 32-வது வயதில் அகால மரணம் அடைந்த செய்தி உலகையே உலுக்கிவிட்டது என்றே சொல்லாம்
மிகப்பலமான மனிதர் இன்றுவரை யாராலும் எட்டிவிடமுடியாத சாதனைகளுக்கு சொந்ததக்காற்றர் உடற்பயிற்சிகளால் உடலை கட்டுக கோப்பாக பேணி வந்தவர் எப்படி 32 வயதில் மரணமடைந்தார் என்ற கேள்வி விடை அறியப்படாத விடுகதையாகவே தொடர்நதுகொண்டிருக்கிறது
பலவாறான வதந்திகளோடு தொடர்ந்த இந்த சந்தேகம் இப்போது ஓரளவுக்கு தீர்க்கப்பட்டிருக்கிறது அதாவது புரூஸ்லியின் மரணம் தொடர்பில் கடுமையான ஆய்வுகளை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவர்கள் இந்த உண்மையை கண்டறிந்துள்ளார்கள் அதில் அவர்கள் வழங்கிய அறிக்கையில் இவ்வாறு சொல்லப்படுகிறது
“ ப 1973-ம் ஆண்டு ஜூலை 20-ம் திகதி காலை வழக்கம் போல உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு தலையில் வலி ஏற்பட்டுள்ளது. படுக்கையில் படுத்த அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
ஆனால் உடல்நலம் குன்றிய தினத்தில் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன்கள் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. அதாவது, புரூஸ்லியின் சிறுநீரகம் செயலிழக்க தொடங்கி இருக்கிறது.
நல்ல ஆரோக்கியமான ஒருவருக்கு இப்படி சிறுநீரகம் திடீரென செயலிழந்து போகாது. ஆனால் புரூஸ்லியின் சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம்தான் அவருக்கு இந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறு வயது முதலாகவே அதிக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் புரூஸ்லிக்கு இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.
இதனால் அளவுக்கு அதிகமான தண்ணீரையும், மதுவையும் செரிமானம் செய்ய அவரது சிறுநீரகத்தால் முடியவில்லை. சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினமும் உடற்பயிற்சி முடித்ததும், நிறைய தண்ணீரை புரூஸ்லி குடித்திருக்கிறார்.
இதனால் அவர் சிறுநீரகம் திடீரென செயலிழந்து, அவரது மூளை வீக்கம் அடைந்துள்ளது. இதுவே அவர் உயிரிழப்பதற்கு காரணமாகி விட்டது' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது
ஆக அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற விடயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லி அந்த மெய்யிலளாளன் ஒப்பற்ற வீரன் , கலைஞன் இப்படி பலவேடங்களைத்தாங்கிய புரூஸ்லி என்ற வரலாற்று நாயகன் உலக வாழ்வை நீத்திருக்கிறான்
என்னதான் மரணமும் இந்த உலக விதியும் புரூஸ்லியின் இரும்பை ஒத்த உடலை விழுங்கியுருந்தாலும் அந்த மகத்தான கலைஞனை மாவீரனை மக்கள் மனங்களில் இருந்து விழுங்கிவிட முடியவில்லை
இந்த உலகம் உள்ளவரை தற்காப்புக்கலை பயிலப்படும் வரை புரூஸ்லி என்ற மனிதன் வாழ்ந்துகொண்டேயிருப்பான்.