ஊடுருவலை தடுக்க எல்லையில் பாம்பு, முதலைகளை வளர்க்க இந்தியா திட்டம்
வங்கதேச எல்லையில் ஊடுருவலை தடுக்க பாம்பு, முதலைகளை வளர்ப்பது குறித்து BSF பரிசீலித்து வருகிறது.
ஊடுருவலை தடுக்க எல்லையில் பாம்பு, முதலை
இந்தியா தனது நில எல்லைகளை சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 7 நாடுகளுடன் பகிர்ந்து வருகிறது. பெரும்பாலான எல்லை பகுதிகளில் வேலி அமைத்து இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை(BSF) பாதுகாத்து வருகிறது.

இதில், வங்கதேசத்துடன் சுமார் 4,096 கிமீ நீளமுள்ள எல்லையை பகிர்ந்து வருகிறது. அதில், 175 கி.மீ தூரத்திற்கு ஆற்றோர மற்றும் சதுப்பு நிலப் பகுதிகள் அடங்கியுள்ளன.
இந்த பகுதியில் ஊடுருவல் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது.
இந்த பகுதிகளில் வேலிகள் அமைப்பது சாத்தியமற்றதாக உள்ள நிலையில், பாம்பு, முதலைகள் போன்ற ஊர்வனவற்றை பயன்படுத்துவது குறித்து BSF பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஊர்வனவற்றை கொள்முதல் செய்வது, இந்த விலங்குகள் எல்லையோரத்தில் வசிக்கும் மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் போன்ற சவால்கள் உள்ளதால் இது பரிசீலனையிலே உள்ளது என BSF அதிகாரி ஒருவர்தெரிவிட்டுள்ளார் .
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |