யூனிவர்சல் 4G, 5G Sim-ஐ அறிமுகம் செய்யும் BSNL., மொபைல் எண்ணை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்!
இந்திய அரசு டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) 4G மற்றும் 5G இணக்கமான ஓவர்-தி-ஏர் (OTA) மற்றும் யூனிவர்சல் சிம் (USIM) தளத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொபைல் எண்ணை தேர்வு செய்யவும், புவியியல் தடைகள் இல்லாமல் சிம் மாற்றம் செய்யவும் முடியும்.
இந்த தளம் முதலில் சண்டிகரில் திறந்து வைக்கப்பட்டது மற்றும் திருச்சியில் ஒரு டிஸாஸ்டர் ரிகவிரி சைட் (disaster recovery site) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தளம் நாடு முழுவதும் உள்ள BSNL வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இணைப்பு மற்றும் சேவை தரத்தை வழங்கும்.
BSNL நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஏ. ராபர்ட் ஜெரார்டு தலைமையில், ஆகஸ்ட் 9 அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது.
BSNL 4G மற்றும் 5G சேவைகளை பரிமாற்ற மையமாக கொண்டு, தமது டெலிகாம் சேவைகளில் புதுமைகளை அறிமுகப்படுத்தி, கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் டிஜிட்டல் இடைவெளியை குறைக்க முயற்சித்து வருகிறது.
BSNL நிறுவனம் இம்மாத இறுதிக்குள் 80,000 4G டவர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது, மேலும் 2025-ஆம் ஆண்டுக்குள் 21,000 டவர்களை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய அரசு, BSNL-க்கு 89,047 கோடி ரூபாயை ஒதுக்கி, 4G/5G ஸ்பெக்ட்ரங்களை வழங்கியுள்ளது. மேலும், BSNL-இன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை 1,50,000 கோடி ரூபாயிலிருந்து 2,10,000 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது.
BSNL கடந்த சில ஆண்டுகளாக கடன் சிக்கல்களில் சிக்கி வருகிறது, இதை சமாளிக்க மத்திய அரசு முந்தைய மூன்று சீரமைப்பு தொகுப்புகளை ஏற்கனவே வழங்கியுள்ளது.
இந்த புதிய நடவடிக்கைகளால், BSNL இன் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மறுசீரமைப்புக்கு உதவியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BSNL 4G 5G Universal SIM, Indian Government BSNL