செல்பியால் சிறைக்கு செல்லும் கனேடியர்: காரணம் என்ன தெரியுமா?
கனேடியர் ஒருவர், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நோயாளி ஒருவருடன் செல்பி எடுத்து அதை சமூக ஊடகத்தில் பதிவேற்றியதற்காக சிறை செல்ல இருக்கிறார்.
செல்பியால் சிறைக்கு செல்லும் கனேடியர்
கனடாவின் ஒன்ராறியோவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார் Andre Leroux என்னும் நபர்.
Dalson Chen/CBC
இந்நிலையில், மருத்துவமனைக்குள் நுழைந்த Bubba Pollock (35) என்னும் சமூக ஊடகப் பிரபலம், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த Andreயுடன், புன்னகை பூத்தவண்ணம், அவரது அனுமதியும் இன்றி செல்பி ஒன்றை எடுத்துள்ளார்.
அதை அவர் சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்ய, அது, Andreவின் மகளான Britt Lerouxக்கு தெரியவந்துள்ளது.
Britt Leroux
அதிர்ச்சியடைந்த Britt கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட Bubbaவுக்கு 60 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் மூன்று ஆண்டுகள் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், 12 மாதங்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவும் Bubbaவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Dalson Chen/CBC
Bubbaவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் செய்த தவறுக்கு அவர் பொறுப்பேற்க உள்ளதால் தான் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் Andreவின் மகளான Britt.
என்றாலும், தண்டனை விதிக்கப்பட்டபிறகும் Bubba திருந்தப்போவதில்லை என்றே தான் அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார் Britt.