உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட கொடூர படுகொலைகள்... ‘போர்க்குற்றம்’ என அறிவித்தது ஜேர்மனி
உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது போர்க்குற்றம் என ஜேர்மனி கூறியுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு சாலைகளில் வீசப்பட்டு கிடந்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உக்ரைனில் ரஷ்யாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
கடவுளிடமிருந்து தப்ப முடியாது! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேத்யூஸ் பரபரப்பு பதிவு
இந்நிலையில் ஜேர்மன் அதிபர் Olaf Scholz கூறியதாவது, உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்களை கொன்றவர்கள் போர்க்குற்றவாளிகள், அவர்கள் அதற்காக பொறுப்புக்கூற வேண்டும்.
புச்சா படுகொலை நம்மால் மறக்க முடியாத ஒன்று. இதை ஒரு குற்றம் என நாம் கடந்துவிடக்கூடாது. இது ஏற்றுக்கொள்ள முடியாத போர்க்குற்றங்கள், இதை செய்தவர்கள் அதற்காக பொறுப்புக்கூற வேண்டும்.
ஐரோப்பிய நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாக்க ஜேர்மனி உறுதிபூண்டுள்ளதால், உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை நாங்கள் தொடர்ந்து வழங்கும். ஐரோப்பிய எல்லைகள் தொடர்ந்து தீண்டப்படாமல் இருக்க வேண்டும் என்று Olaf Scholzகூறினார்.