ராஜ குடும்பத்தில் ஒரு மரணம்... யார் அந்த பெண்மணி?
ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ஒரு பெண்மணி மரணமடைந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் அந்த பெண்மணி?
மரணமடைந்த அந்த பெண்மணியின் பெயர், கேத்தரின் லூசி மேரி வோர்ஸ்லீ (Katharine Lucy Mary Worsley).
It is with deep sorrow that Buckingham Palace announces the death of Her Royal Highness The Duchess of Kent.
— The Royal Family (@RoyalFamily) September 5, 2025
Her Royal Highness passed away peacefully last night at Kensington Palace, surrounded by her family.
The King and Queen and all Members of The Royal Family join The Duke… pic.twitter.com/OsCeb3pQ7d
கென்ட் கோமகள் என அழைக்கப்படும் கேத்தரின், மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சகோதரர் முறையினரான கென்ட் கோமகனான இளவரசர் எட்வர்ட் என்பவரின் மனைவி ஆவார்.
அரண்மனை வெளியிட்டுள்ள செய்தியில், கென்ட் கோமகள் குடும்பத்தினர் சூழ அமைதியான முறையில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மன்னர், ராணியுடன், ராஜ குடும்பத்தினர் அனைவரும் மறைந்த கோமகள் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது 92ஆவது வயதில் மரணமடைந்த கேத்தரின், இரண்டு கருச்சிதைவுகள் உட்பட வாழ்வில் பல தனிப்பட்ட கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் அனுபவித்தவர்.
தனது தனிப்பட்ட கஷ்டங்களையும் தாண்டி ராஜகுடும்பத்தில் திறம்பட கடமையாற்றிவந்த கேத்தரின், 2002ஆம் ஆண்டு ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகுவதாகவும், HRH பட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என்றும் மகாராணி எலிசபெத்திடம் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தும், கேத்தரின் முற்றிலும் ஓய்வுபெறவில்லை.
அதற்குப் பிறகும் பல பொறுப்புகளை அவர் நிறைவேற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |