மதுபான விடுதியில் கலாட்டா... பக்கிங்காம் அரண்மனை பெண் ஊழியர் கைது
பக்கிங்காம் அரண்மனை ஊழியர்களுக்காக, கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
பார்ட்டியில் கலந்துகொண்ட பெண் ஊழியர் ஒருவர், மதுபான விடுதியில் கலாட்டா செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபான விடுதியில் கலாட்டா...
செவ்வாய்க்கிழமை மாலை, பக்கிங்காம் அரண்மனை ஊழியர்களுக்காக, கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அந்த பார்ட்டியைத் தொடர்ந்து அரண்மனை ஊழியர்கள் சுமார் 50 பேர், மதுபான விடுதி ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.
இரவு சுமார் 9.00 மணி வாக்கில், அரண்மனை ஊழியரான ஒரு பெண், அந்த மதுபான விடுதியின் மேலாளரைத் தாக்கியுள்ளார். அத்துடன், அவர் கண்ணாடிக்கோப்பைகளை தூக்கி வீசி உடைக்க, பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அந்தப் பெண்ணை கைது செய்து காவலில் அடைத்த பொலிசார், 24 மணி நேரத்துக்குப் பின்பே அவரை விடுவித்துள்ளார்கள். அவருக்கு பெனால்ட்டி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |