பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணியாரின் உடல்
ஸ்கொட்லாந்தில் இருந்து இளவரசி ஆன் தமது தாயாரின் உடலுடன் லண்டன் வந்து சேர்ந்துள்ளார்.
ராணியாரின் உடல் கடைசியாக ஒருமுறை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பியுள்ளது.
ராணியார் இரண்டாம் எலிசபெத் உடல் கடைசியாக ஒருமுறை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பியுள்ளது.
ஸ்கொட்லாந்தில் இருந்து ராயல் விமானப்படை விமானத்தில் ராணியாரின் உடல் கொண்டுவரப்பட்டு, கடைசியாக ஒருமுறை பக்கிங்ஹாம் அரண்மனையில் குடும்பத்தினர் மரியாதை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
@skynews
ஸ்கொட்லாந்தில் இருந்து இளவரசி ஆன் தமது தாயாரின் உடலுடன் லண்டன் வந்து சேர்ந்துள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி, ஹரி மற்றும் மேகன் தம்பதி உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திரண்டு வரவேற்றுள்ளனர்.
@skynews
நாளைய தினம் ராணியாரின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்கல் அனைவரும் ஒன்றாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இதனிடையே, விமான நிலையத்தில் இருந்து லண்டன் வீதி வழியே ராணியாரின் உடல் கொண்டுசெல்லப்பட்ட பகுதி மொத்தமும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.
@skynews
@skynews
@skynews