பக்கிங்காம் அரண்மனையை விற்க முயன்ற பிரித்தானிய மன்னர்
பிரித்தானியாவை பலவகையான மன்னர்களும் மகாராணிகளும் ஆட்சி செய்துள்ளார்கள். அவர்களில் ஒருவர், பக்கிங்காம் அரண்மனையையே விற்க முயன்றாராம்.
அதுவும் ஒருமுறையல்ல, இரண்டு முறை!
பக்கிங்காம் அரண்மனையை விற்க முயன்ற பிரித்தானிய மன்னர்
அவரது பெயர், மன்னர் நான்காம் வில்லியம். அவர் மன்னர் மூன்றாம் ஜார்ஜுக்கும், ராணி சார்லட்டுக்கும் பிறந்தவர்.
ஆட்சிக்கு வர வாய்ப்பேயில்லை என கருதப்பட்ட வில்லியம், ஆட்சிக்கு வரவேண்டிய அவரது சகோதரர் மரணமடைந்ததால் எதிர்பாராவிதமாக மன்னரானார்.
செலவுகளை குறைக்கவேண்டும் என்ற எண்னம் கொண்ட வில்லியம், தனது பட்டமளிப்பு விழாவுக்கான செலவுகளையே குறைக்க திட்டமிட்டவராம்.
சாதாரணமாக, பாதுகாவலர்கள் யாரும் உடனின்றி தனியாக லண்டன் மற்றும் பிரைட்டன் நகர தெருக்களில் நடந்து செல்வாராம் மன்னர் வில்லியம்.
மன்னர் வில்லியமைப் பொருத்தவரை, ஒரு விடயம் வரலாற்றில் மறக்கமுடியாததாக கருதப்படுகிறது.
அது என்னவென்றால், ஒரு முறை பக்கிங்காம் அரண்மனையை ராணுவத்துக்கு கொடுத்துவிட திட்டமிட்டாராம் அவர்.
இன்னொரு முறை, நாடாளுமன்ற கட்டிடத்தில் தீப்பிடித்தபோது, பக்கிங்காம் அரண்மனையை நாடாளுமன்றத்துக்குக் கொடுக்க முன்வந்தாராம் வில்லியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |