பிரித்தானியா... பட்ஜெட் தாக்கல் செய்தார் ரிஷி சுனிக்! இனி இதன் விலை கடும் உயர்வை தொடும்
பிரித்தானியாவில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், சிகரெட் பாக்கெட்டின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இன்று சான்சலர் Rishi Sunak புதிய பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலே புகையிலை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இலையுதிர் காலத்திற்கான இந்த பட்ஜெட்டில் புகையிலை பொருட்களுக்கான வரியை Rishi Sunak உயர்த்திய நிலையில், இந்த விலை அதிகரிப்பு வருகிறது.
இதன் மூலம் மிகவும் உயர்ரக(சிறந்த பிராண்டு) சிகரெட் பாக்கெட்டுகளின் விலை 88p-ஆக உயர்ந்துள்ளது. அதாவது 12.73பவுண்டிற்கு கொடுக்கப்பட்ட இந்த சிகரெட் பாக்கெட்டுகளின் விலை, தற்போது 13.60 பவுண்டை தொட்டுள்ளது.
அதுவே குறைந்த விலையுள்ள பிராண்டுகளின்(20 சிகரெட்டுகள் கொண்ட பாக்கெட்) சிகரெட் பாக்கெட்டுகளை வாங்கும் போது, அதனுடன் 63p சேர்க்கப்படும். அதாவது 9.10 பவுண்ட்டிற்கு விற்கப்பட்ட அதன் விலை தற்போது 9.73 பவுண்ட் ஆக உயரும்.
அதே போன்று 30 கிராம் கொண்ட புகையிலை சிகரெட்டின் விலை 8.14 பவுண்ட்டில் இருந்து 9.02-பவுண்ட் ஆக அதிகரிக்கும். இது இன்று மாலை(அக்டோபர் 27) முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது சிகரெட்டின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு தேசிய புள்ளியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்களின் படி 20 பாக்கெட் கொண்ட ஒரு சராசரி சிகரெட் பாக்கெட் விலை 5.90-பவுண்ட் ஆகவும், 2000-ஆம் ஆண்டில், சராசரியாக 4 பவுண்ட் ஆகவும் இருந்துள்ளது.
இதனால் இந்த விலை ஏற்றத்தால், புகைப்பிடிப்பவர்கள், இது ஒரு ஆயுத வரி விதிப்பு என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், தற்போது பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வை சந்தித்து வருவதால், இதன் வரி உயர்வு பட்ஜெட்டில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னர் நாங்கள் அறிவிக்கப்பட்டது போல், எரிபொருள் வரி உயர்வு ரத்து செய்யப்படும் என்று Rishi Sunak பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூறினார்.
மேலும், தொடர்ந்து 12 ஆண்டுகளாக எரிபொருள் வரி உயர்வு ரத்து செய்யப்படுகிறது. ஒரு வேளை இன்று பட்ஜெட் தாக்கலில் வரி உயர்த்தப்பட்டிருந்தால், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 147p-ஐ தொட்டிருக்கும் என்று எரிபொருள் செய்தித் தொடர்பாளர் சைமன் வில்லியம்ஸ் கூறினார்.
மதுபானங்கள் தொடர்பான வரி விகிதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எத்தனை சதவீதம் என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.