ரூ.6,499க்கு 5200mAh பற்றரி, 32MB கேமரா! ரெட்மி A5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இதோ!
பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் சியோமி ரெட்மி ஏ5 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சியோமி ரெட்மி
சீனாவைச் சேர்ந்த பிரபல மின்னணுவியல் நிறுவனமான சியோமியின் துணை பிராண்ட் தான் ரெட்மி.
2013 ஆம் ஆண்டு முதல் குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்கி வரும் ரெட்மி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
Redmi A5, bergaya dan reka bentuk kamera yang menonjol, mencipta rekaan yang moden serta praktikal.
— Xiaomi Malaysia (@XiaomiMalaysia) April 21, 2025
🌊 Ocean Blue
🌞 Sandy Gold
🌌 Midnight Black
Jadi… yang mana satu akan masuk poket anda?
Beli sekarang: https://t.co/7IbGjSSnnB#XiaomiMalaysia #RedmiA5 pic.twitter.com/rdyZEVlLLq
ரெட்மி A5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்
அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி ஏ5-ஐ களமிறக்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் இந்திய சந்தையில் துவங்கியுள்ளது.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான், எம்ஐ.காம், ஃபிளிப்கார்ட் மற்றும் அனைத்து முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களிலும் இந்த போனை வாங்கிக்கொள்ளலாம்.
ரெட்மி A5-ன் சிறப்பம்சங்கள்
திரை: 6.88 இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் சிறந்த காட்சி அனுபவம்.
இயங்குதளம்: அதிநவீன ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மற்றும் இரண்டு வருட ஓஎஸ் அப்டேட் உத்தரவாதம்.
செயலி: வேகமான மற்றும் திறமையான செயல்பாட்டிற்கு ஆக்டா-கோர் Unisoc T7250 ப்ராஸஸர்.
Big Features, Small Price—Meet the REDMI A5! 💥
— Xiaomi Nigeria (@XiaomiNigeria) April 17, 2025
Tired of blurry night photos? The 32MP AI dual camera has your back! Need a screen big enough for all your binge-watching? The 6.88” immersive display is here for it. Hate running out of battery? The 5200mAh battery keeps you… pic.twitter.com/AknIDeHImt
பின்புற கேமரா: தெளிவான மற்றும் துல்லியமான புகைப்படங்களுக்கு 32 மெகாபிக்சல் பிரதான கேமரா.
முன்புற கேமரா: அட்டகாசமான செல்ஃபிக்களுக்காக 8 மெகாபிக்சல் கேமரா.
இணைப்பு: அதிவேக 4ஜி நெட்வொர்க் வசதி.
சார்ஜிங்: நவீன யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 15 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு.
பற்றரி: நீடித்து உழைக்கும் 5200mAh பற்றரி.
ரேம் மற்றும் சேமிப்பு: 3ஜிபி, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு விருப்பங்கள்.
விலை: கவர்ச்சிகரமான ஆரம்ப விலை ரூ.6,499/- முதல்.
ரெட்மி A5 ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் சிறந்த அம்சங்களையும் விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |