பிரித்தானிய தம்பதியின் 70,000 பவுண்ட் நீச்சல் குளம்: காலை குளியல் எடுத்த 8 எருமை மாடுகள்: வீடியோ
பிரித்தானிய தம்பதியின் விலையுயர்ந்த நீச்சல் குளத்தில் எருமை கூட்டம் ஒன்று அதிகாலை குளியல் எடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரித்தானிய தம்பதியின் விலையுயர்ந்த நீச்சல் குளம்
பிரித்தானியாவின் ஏசெக்ஸ்(Essex) பிராந்தியத்தில் வசிக்கும் தம்பதி ஒருவரின் விலையுயர்ந்த நீச்சல் குளம் ஒன்றில் 18 எருமை மாடுகள் புகுந்து அந்த பகுதிகளை நாசப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதில் 8 எருமை மாடுகள் வரை நீச்சல் குளத்தில் விழுந்து காலை குளியல் எடுத்ததில் 25,000 பவுண்டுகள் மதிப்பிலான சொத்து சேதமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
It's hot but it's not that hot! Moment herd of escaped water #buffalo stampede through couple's garden and take dip in their swimming pool - causing £25,000 in damage to their Colchester #Essex home pic.twitter.com/uYM8kZpwgP
— Hans Solo (@thandojo) May 23, 2023
இந்த சம்பவம் தொடர்பாக Guardian செய்தி நிறுவனத்திடம் ஓய்வு பெற்ற தம்பதி ஆண்டி மற்றும் லினெட் ஸ்மித் பேசிய போது, எனது மனைவி சமயலறைக்கு அதிகாலை நுழைந்த போது அங்கிருந்து ஜன்னல் வழியாக நீச்சல் குளத்தில் வழக்கத்திற்கு மாறான நிகழ்வை கவனித்தார்.
அப்போது எங்கள் 70,000 பவுண்டுகள் மதிப்புள்ள நீச்சல் குளத்தில் கிட்டத்தட்ட 8 எருமை மாடுகள் விழுந்து அதிகாலை குளியல் எடுத்துக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின் உடனடியாக 999 என்ற அவசர அழைப்புகளுக்கு நிலைமையை எடுத்துக் கூறினார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் எருமை மாடுகளை பத்திரமாக மீட்டனர்.
செயலிழந்த மின் வேலி
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது, மேலும் தடுப்பு மின்வேலி செயலிழப்பால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எருமை மாடுகளால் ஏற்பட்ட சேதங்களை ஈடுகட்டுவதற்காக இன்சூரன்ஸ் தொகை பாதிக்கப்பட்ட தம்பதிக்கு வழங்கப்பட்டு இருப்பதாக NFU மியூச்சுவல் இன்சூரன்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.