அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பயங்கர தீ விபத்து: போராடும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கட்டிடம் இடிந்து விழுந்தது.
தீ விபத்து
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள 7 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் தீயானது கட்டிடம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து சிறிது நேரத்தில் கட்டிடத்தின் மேல் தள சுவர் முழுவதும் இடிந்து சாலையில் விழுந்தது.
Extraordinary footage of the building wall collapsing as a result of the fire in Surry Hills, Sydney pic.twitter.com/XFedraRs0r
— Leonardo Puglisi (@Leo_Puglisi6) May 25, 2023
இதன்மூலம் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனம் ஒன்றில் தீ பரவியது. இதற்கிடையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் பற்றிய தீ, அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் பரவிய தொடங்கியது, இதனால் அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் விரைவாக வெளியேற்றப்பட்டனர்.
தீயை அணைக்க போராடும் வீரர்கள்
இந்நிலையில் கட்டிடத்தில் பரவிய தீயை அணைக்க 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேலும் தீயணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அனைவரும் அந்த பகுதிகளை தவிர்க்குமாறு தீயணைப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Big fire near central station #sydney #smh @abcsydney pic.twitter.com/WZhsGm0UQv
— Alan Foil (@Foilalan_) May 25, 2023
ஆனால் இந்த தீ விபத்து சம்பவத்திற்கான காரணம் மற்றும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.
Massive fire in #Sydney Cbd pic.twitter.com/UywUuS8N6I
— The Aviation Watch (@aviation_watch) May 25, 2023