2026-ல் யூரோவை அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்கும் ஐரோப்பிய நாடு
2026 ஜனவரி 1 முதல் பல்கேரியா தனது தேசிய நாணயமான Lev-ஐ (BGN) விட்டு, யூரோவை (EUR) அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்க உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்கேரியா இந்த முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
முக்கிய அறிவிப்புகள்
ஜனவரி 1, 2026 முதல் யூரோ பல்கேரியாவின் அதிகாரப்பூர்வ நாணயமாகும்.
ஜனவரி 31, 2026 வரை லெவ் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தலாம்.
ஜூன் 30, 2026 வரை, லெவ் வைத்திருப்பவர்கள் அதை வங்கிகளில் இலவசமாக யூரோவாக மாற்றிக் கொள்ளலாம்.

பயணிகளுக்கான அறிவுரை
மாற்றத்தின் ஆரம்ப நாட்களில் ATM மற்றும் கார்டு பரிவர்த்தனைகளில் தற்காலிக சிக்கல்கள் ஏற்படலாம்.
அதனால், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் போதுமான யூரோ அல்லது லெவ் பணத்தை கையிருப்பில் வைத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
பவுண்டை யூரோவாக முன்கூட்டியே மாற்றிக் கொள்வது பயணத்தை எளிதாக்கும் என அறிவுறுத்தப்படுகிறது.
ஹோட்டல்கள், உணவகங்கள் போன்ற முக்கிய இடங்களில் யூரோ ஏற்கப்படும். ஆனால் சிறிய கடைகள், உள்ளூர் சேவைகளில் இன்னும் லெவ் தேவைப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
10,000 யூரோவிற்கு மேற்பட்ட பணம் அல்லது travelers cheques வைத்திருப்பவர்கள், நாட்டில் நுழையும் போது அல்லது வெளியேறும் போது அறிவிக்க வேண்டும்.
இறக்குமதி செய்யப்படும் மாமிசம், பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம்
பல்கேரியா Schengen பகுதியில் இருப்பதால், பாஸ்போர்ட் 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், பயணம் முடியும் நாளுக்கு பிறகு குறைந்தது 3 மாதங்கள் செல்லுபடியாகும் காலம் இருக்க வேண்டும்.
பல்கேரியாவின் யூரோ மாற்றம், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய சவால்களையும் வசதிகளையும் உருவாக்கும். முன்கூட்டியே திட்டமிட்டு, நாணய மாற்றம் மற்றும் பாஸ்போர்ட் விதிமுறைகளை பின்பற்றினால், பயணம் சிரமமின்றி நடைபெறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bulgaria currency change 2026 lev to euro, UK travelers Bulgaria euro adoption travel tips, Bulgaria eurozone entry January 1 2026 transition, Lev accepted until January 31 2026 exchange deadline, Free lev to euro conversion Bulgarian banks June 2026, UK Foreign Office Bulgaria travel advisory passport rules, Schengen entry requirements Bulgaria UK tourist guidance, Bulgaria customs rules meat milk import restrictions, Currency exchange advice pounds to euros before travel, Bulgaria tourism euro adoption impact UK visitors