பிரித்தானியாவில் துன்புறுத்தப்பட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ. 24 கோடி இழப்பீடு!
பிரித்தானியாவின் ராயல் மெயிலால் துன்புறுத்தப்பட்ட இந்திய வம்சாவளி பெண் ஊழியருக்கு ரூ.24 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
நஷ்டஈடாக ரூ. 24 கோடி
இங்கிலாந்தில் ராயல் மெயிலுக்கான மிகப்பெரிய இழப்பீட்டுத் தீர்வுகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்திய வம்சாவளி ஊழியரின் புகார் ஏற்கப்பட்டு 2.3 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 24 கோடி) நஷ்டஈடாக வழங்கப்பட்டது.
கம் ஜூதி (Kam Jhuti) எனும் அப்பெண், சக ஊழியர் ஒருவர் தங்களின் போனஸை பெற்றுக்கொண்டு முறைகேடு செய்ததை அறிந்து, அது குறித்து புகார் செய்த போது, தனது மேலதிகாரியால் அச்சுறுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாக, ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தின் முன் கூறியிருந்தார்.
2019-ல் தீர்ப்பு
இதையடுத்து விசரணை நடத்தப்பட்டு, மேலாகிக்காரியின் நடத்தை தொழிலாளியின் மீது 'பேரழிவு' தாக்கத்தை ஏற்படுத்தியதாக தீர்ப்பாயம் கண்டறிந்து, 2019-ல் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனிடையே, ஜூட்டி நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டார், மேலும் மனஉளைச்சல் சீர்குலைவு மற்றும் கடுமையான மனச்சோர்வினால் அவதிப்பட்டார்.
தீர்ப்பில், பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு 2,365,614.13 பவுண்டுகள் நஷ்டஈடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அக்டோபர் 3, 2022 அன்று தரப்பினருக்கு அனுப்பப்பட்ட பரிகாரங்கள் குறித்த தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு எதிரான ராயல் மெயில் மேல்முறையீட்டின் முடிவு வரும் வரை இழப்பீடுக்கான தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தங்கு தடையை நீக்குவதற்கு விண்ணப்பிக்க இரு தரப்பினருக்கும் சுதந்திரம் உள்ளது.
AFP
அந்த மொத்த இழப்பீட்டில், உரிமைகோருபவருக்கு ராயல் மெயில் மொத்தம் 250,000 பவுண்டுகள் செலுத்த வேண்டும். இந்தத் தொகையைப் பொறுத்தவரையில் தங்கு தடை விதிக்கப்படாது. விசாரணை திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் பிரதிவாதி இந்தத் தொகையை உரிமையாளருக்கு செலுத்த வேண்டும்.
செப்டம்பர் 2013-ல் லண்டனை தளமாகக் கொண்ட ராயல் மெயிலின் மார்க்கெட் ரீச் யூனிட்டில் ஜூதி ஆண்டுக்கு 50,000பவுண்ட்களுக்கு ஊடக நிபுணராக பணிபுரிந்ததாக 2019 உச்ச நீதிமன்ற விசாரணையில் கூறப்பட்டது. இந்த வழக்கில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால், ராயல் மெயில் இந்த கட்டத்தில் மொத்த இழப்பீட்டில் 250,000 பவுண்டுகள் மட்டுமே செலுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |