13 நோ பால்களை வீசி வெறுப்பேற்றிய பும்ரா! இலங்கை ரசிகர் அடித்த கிண்டல்... வைரலாகும் பதிவு
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் பும்ரா 13 நோ பால்களை வீசி வெறுப்பேற்றிய நிலையில் அதற்கான காரணம் குறித்து ஜாம்பவான் ஜாஹீர் கான் பேசியுள்ளார்.
இந்த தொடரில் முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு கூட வீழ்த்தவில்லை.
இந்த போட்டியில் 26 ஓவர்கள் வீசி அவர் 79 ரன்களையும் விட்டுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி இந்த முதல் இன்னிங்சில் இந்திய அணி வீசிய 17 நோ பால்களில் 13 நோ பால்களை பும்ரா வீசி இருந்தார். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முக்கியமான கட்டத்தில் நோபால் வீசும் பழக்கமுடைய பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நோ பால்களை வீசியுள்ளது ரசிகர்களிடையே கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
அவரை கிண்டலடித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர், இலங்கை ரசிகர் டேனியல் அலெக்சாண்டர் இது தொடர்பாக வெளியிட்ட கிண்டல் பதிவு வைரலானது.
இது தொடர்பாக பேசிய ஜாஹீர் கான், பும்ரா இந்த இன்னிங்சில் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற காரணத்தினாலேயே பவுலிங் ரன்னப்பில் கூடுதல் வேகமும், க்ரீசில் கால்வைக்கும் போது சற்று அழுத்தமான புஷ்ஷையும்யும் கொடுத்தார்.
இதன் காரணமாகவே அவர் நோ பால் வீசுகிறார் என்று நினைக்கிறேன். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளராக அவரது ரன்னப் மட்டுமே அவரது பவுலிங் லைன் மட்டும் ரிதம் ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியமானது.
ஆனால் ஒரு பந்து வீச்சாளராக அவர் விக்கெட் எடுக்காத போது அவர் கூடுதலான அழுத்தத்தையும், வேகத்தையும் தனது பந்துவீச்சில் அளிக்க நினைத்ததே இந்த நோ பால்களுக்கு காரணம் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார்.
Bumrah : No wickets. No balls.
— Daniel Alexander (@daniel86cricket) August 14, 2021