உலகக் கோப்பையில் இருந்து விலகும் பும்ரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
பும்ரா இல்லாத நிலையிலும் முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பும்ரா 50 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. முதுகு வலியால் பாதிக்கப்பட்ட பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு பரிசோதித்தது.
பின்னர் அவருக்கு ஓய்வு தேவை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காயம் காரணமாக உலகக் கோப்பையில் பும்ரா களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
PTI
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். எனினும், அக்டோபர் 2ஆம் திகதி நடக்க உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பும்ரா பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
AFP