என் கணவர் நெருப்பு மாதிரி! பும்ராவின் பந்துவீச்சை பார்த்து மிரண்ட அவரது மனைவி
என் கணவர் நெருப்பு மாதிரி! பும்ராவின் பந்துவீச்சை பார்த்து மிரண்ட அவரது மனைவி
கொல்கத்தா அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா குறித்து அவரது மனைவி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டார்.
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டி மும்பையின் பட்டீல் மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும், கடந்த போட்டிகளில் பெரிதாக சோபிக்காத மும்பை வீரர் ஜஸ்பிரித் பும்ரா, இந்த போட்டியில் மிரட்டலாக பந்து வீசினார்.
மற்ற பந்துவீச்சாளர்களின் ஓவரை வெளுத்து வாங்கிய கொல்கத்தா வீரர்களால் பும்ராவின் ஓவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவ்வளவு துல்லியமாக பந்து வீசிய பும்ரா, ஒரு ஓவரை மெய்டன் செய்ததுடன் 10 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுதான் அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். நேற்றைய போட்டிக்கு முன்பு வரை விமர்சனங்களை எதிர்கொண்ட பும்ரா, ஒரே போட்டியில் அதனை தவிடுபொடியாக்கி விட்டார்.
இந்த நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன், தன் கணவரின் ஆட்டத்தை பார்த்து வியந்து போய் ட்வீட் செய்தார். அதில், 'ஹோலி மோலி! என் கணவர்நெருப்பாக தகித்துள்ளார்' என எமோஜி மூலம் குறிப்பிட்டிருந்தார்.
Holy moly! My husband is ???
— Sanjana Ganesan (@SanjanaGanesan) May 9, 2022
ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளரும், தன்னை விட மூன்று வயது மூத்தவருமான சஞ்சனா கணேசனை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.