முறைத்து சீண்டிய ஜேன்சன்.. சீறிச் சென்ற பும்ரா! ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டில் பரபரப்பு: வைரலாகும் வீடியோ
ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டில் இந்திய வீரர் பும்ராவும், தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ ஜேன்சனும் மோதல் போக்கில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் தொடக்கத்தில் 58 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் பேட்டிங்கை தொடங்கியது.
ரஹானே, புஜாரா நிதானமாக விளையாடி அரைசதமடித்தனர். எனினும், அவர்களுக்கு பிறகு வந்த வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
2வது இன்னிங்ஸில் 226 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணிக்கு 240 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
மயங்க் அகர்வால் (23), கே.எல்.ராகுல் (8), புஜாரா (53), ரஹானே (58), ரிஷப் பண்ட் (0), அஸ்வின் (16), ஷர்துல் தாக்கூர் (28), முகமது ஷமி (0), பும்ரா (7), முகமது சிராஜ் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஹனுமா விஹாரி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா, இங்கிடி, ஜேன்சன் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் 53வது ஓவரை தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ ஜேன்சன் வீச, இந்திய வீரர் பும்ரா பேட்டிங் செய்தார்.
ஜேன்சன் வீசிய முதல் பந்து பும்ராவின் வலது தோளில் பட்டது. 2வது பந்தை பும்ரா விளாச பார்த்து தவறவிட்டார்.
3வது பந்து மீண்டும் பும்ரா தோளில் தாக்கியது, ஆனால் தோளை தட்டி விட்ட அவர் கெத்தாக நின்றார்.
4வது பந்தையும் பும்ரா விளாச பார்த்தார், ஆனால் பந்து பேட்டில் படாமல் அருகில் இருந்த பீல்டரிடம் சென்றது.
இதனையடுத்து ஜேன்சன் பும்ராவை முறைத்தார், பதிலுக்கு பும்ராவும் அவரை முறைத்தார்.
பின் ஜேன்சன் பும்ராவை பார்த்து ஏதோ சொல்ல, பும்ரா சீறி வந்தார், பின் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி வேகமாக வந்து மோதல் போக்கில் ஈடுபட்டனர்.
Same thing happened with Bumrah in England 2021 series and the rest is the history #SAvIND
— Dheeraj Pareek? (@DheerajpareekDP) January 5, 2022
R.I.P Opposition???? pic.twitter.com/bQySaUI3g3
உடனே நடுவர் தலையிட்டு இருவரையும் விலக்கி அனுப்பினார். எனினும், ஜேன்சன் வீசிய அடுத்த இரண்டு பந்துகளிலும் பும்ரா ரன் ஏதும் அடிக்கவில்லை. எனினும், ரபாடா வீசிய அடுத்த ஓவரில் பும்ரா சிக்சர் விளாசினார்.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.