அவுஸ்திரேலியாவை முதல்முறையாக வீழ்த்திய கேப்டன்! பும்ராவின் வரலாற்று சாதனை
பெர்த் மைதானத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.
பும்ரா சாதனை
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த்தில் நடந்த டெஸ்டில், இந்தியா 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இதன்மூலம் அவுஸ்திரேலியாவை பெர்த்தில் முதல் முறையாக வீழ்த்திய கேப்டன் என்ற சாதனையை ஜஸ்பிரித் (Jasprit Bumrah) படைத்தார்.
அதேபோல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் மிகப்பெரிய வெற்றியையும் (295 ஓட்டங்கள்) இந்தியா பதிவு செய்தது.
கபில் தேவிற்கு பின்
பும்ரா அவுஸ்திரேலியாவில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதித்துள்ளார்.
மேலும், கபில் தேவிற்கு (10/135) பிறகு சிறப்பாக பந்துவீசி (8/72) இந்தியாவை வெற்றி பெற வைத்த கேப்டன் என்ற பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |