மிரட்டலான பந்துவீச்சால் முதலிடம் பிடித்த பும்ரா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்த நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார்.
இரண்டு ஆண்டுக்கு பின்னர் முதலிடத்தை பிடித்துள்ள பும்ரா, நியூசிலாந்து பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டை பின்னுக்கு தள்ளினார். மொத்தம் 718 புள்ளிகளை பெற்று ஆறு இடங்கள் முன்னேறி இருக்கிறார்.
மேலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பிடித்த 3வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
PC: AFP