2024ம் ஆண்டின் உலகின் சிறந்த டெஸ்ட் வீரர் யார்? ஐசிசி விருதுக்கு பும்ரா உள்பட 4 பேர் பரிந்துரை
2024ம் ஆண்டின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு பும்ரா உள்ளிட்ட 4 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த டெஸ்ட் வீரர் யார்?
உலகின் சிறந்த டெஸ்ட் வீரர் யார்? என்ற கேள்விக்கு பதிலளிக்க ஐசிசி தயாராகி வருகிறது. இதற்காக ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு நான்கு முன்னணி வீரர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக், மற்றும் இலங்கையின் குசல் மெண்டிஸ் ஆகியோர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
வீரர்களின் அசத்தும் சாதனை
பும்ரா 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்களை கைப்பற்றி எதிரணிகளை திணறடித்துள்ளார்.
இங்கிலாந்தின் பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் தங்களது துடுப்பாட்டத்தால் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளனர்.
ஜோ ரூட் 6 சதங்கள் மற்றும் 5 அரை சதங்கள் உடன் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,556 ஓட்டங்களும், ஹாரி புரூக் 4 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் உடன் 12 போட்டிகளில் விளையாடி 1,100 ஓட்டங்களும் குவித்துள்ளனர்.
இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் 9 போட்டிகளில் விளையாடி 1,049 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 74.92 என்ற அளவில் இருப்பது விருதுக்கான பரிசீலனையில் முக்கிய குறிப்பு புள்ளியாக பார்க்கப்படலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |