நாங்க ரெம்ப கஷ்டபபடுறோம்! இந்திய அணியில் இருக்கும் பிரச்சனையை உடைத்த பும்ரா
இந்திய அணியில் இருக்கும் பிரச்சனையை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா வெளிப்படையாக பேசியுள்ளார்.
உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 போட்டியில் நேற்று நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.
இதனால், இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி இப்படி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருவதால், ஏதோ ஒரு பிரச்சனை இந்திய அணிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இது குறித்து கூறுகையில், உண்மையிலே சொல்ல வேண்டும் என்றால் எங்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது.
ஐபிஎல் தொடர் போன்றவை காரணமாக குடும்பத்தை விட்டு சுமார் 6 மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறோம். பயோ பபுள் சூழலில் இருப்பதால் எங்களுக்கு மீண்டுவர ஓய்வு தேவை, நீண்டகாலமாகக் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது, பயோ-பபுள் சூழலில் இருப்பது போன்றவை வீரர்களுக்கு களைப்பை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், எங்களை நல்லமுறையில் வைத்திருக்க பிசிசிஐ நிர்வாகம் முயன்று வருகிறது. இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம், நேரம் கடினமானது. பெருந்தொற்று பரவி வருகிறது.
இதை ஏற்றுக்கொண்டு செயல்பட முயற்சிக்கிறோம். ஆனாலும், சில நேரம், பயோ பபுள் சூழல், மற்றும் மன ரீதியாக களைப்பு அடைந்து விடுகிறோம் என்று கூறியுள்ளார்.