அவர் போராளி குணத்துடன் சண்டைக்கு தயாராக இருக்கிறார்: புகழ்ந்து தள்ளிய பும்ரா
முகமது சிராஜ் ஒரு சிறந்த அணுகுமுறையைப் பெற்றுள்ளார் என ஜஸ்பிரித் பும்ரா பாராட்டியுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான காபா டெஸ்டின் முதல் இன்னிங்சில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அவரது சக அணி பந்துவீச்சாளர் முகமது சிராஜ் (Mohammed Siraj) 97 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்நிலையில் சிராஜ் குறித்து கருத்து தெரிவித்த பும்ரா அவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
சிராஜ் ஒரு போராளி
அவர் கூறுகையில், "அவர் (சிராஜ்) ஒரு சிறந்த அணுகுமுறையைப் பெற்றுள்ளார். மேலும் அவர் அணி விரும்பும் ஒரு போராளியின் குணத்தைப் கொண்டுள்ளார். நான் தனிப்பட்ட முறையில் அதை விரும்புகிறேன். அவர் ஒரு சண்டைக்கு தயாராக இருக்கிறார்.
எப்போதும் அணிக்காக தனது அனைத்தையும் கொடுக்கிறார். நான் அவரிடம் பேசும்போது, உங்கள் முகத்தில் புன்னைகை இருக்க வேண்டும். நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பினீர்கள், அதை செய்கிறீர்கள்.
உங்கள் குடும்பம் உங்களைப் பற்றி உண்மையிலேயே பெருமை கொள்கிறது. இதற்கு முன்பு பலர் செய்யாததை நீங்கள் செய்கிறீர்கள் என்றேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |