மோசமான நிலையில் மும்பை இந்தியன்ஸ்..அணியுடன் இணைந்த பும்ரா..உற்சாகத்தில் ரசிகர்கள்
காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்பிரித் பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார்.
மும்பை இந்தியன்ஸ்
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4யில் மூன்று போட்டிகளில் தோல்வியுற்று, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதனால் மும்பை ரசிகர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸுக்கு வலுசேர்க்கும் விதமாக ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) அணியுடன் இணைந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரின் இறுதிப் போட்டியில் பும்ரா காயமடைந்தார்.
ஜஸ்பிரித் பும்ரா
அதனைத் தொடர்ந்து தொடர் சிகிச்சையில் அவர் இருந்ததால், ஐபிஎல் தொடரின் முதல் 4 போட்டிகளில் பங்கேற்கவில்லை.
தற்போது காயத்தில் இருந்து அவர் மீண்டு அணியுடன் இணைந்திருந்தாலும், நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டலான வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் வருகை, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |