இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் அடி! டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்
டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதுகு எலும்பு பிரச்சனை காரணமாக அவதிப்படும் பும்ரா அதன் காரணமாகவே விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் பி.டி.ஐ-யிடம் கூறுகையில், பும்ராவுக்கு முதுகு பகுதியில் எலும்பு முறிவு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், சில மாதங்கள் அதன் காரணமாக அவர் விளையாடாமல் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய பும்ரா நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் பங்கேற்க திருவனந்தபுரத்திற்கு இந்திய அணியுடன் பயணிக்கவில்லை.
moneycontrol
பும்ரா விலகல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே மற்றொரு நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக டி20 அணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.