மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தும் தோல்வி ஏன்? பும்ரா சொன்ன காரணம்
பர்மிங்காமில் நடந்த 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றது குறித்து ஜஸ்பிரித் பும்ரா விளக்கம் அளித்துள்ளார்.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 378 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோரின் மிரட்டலான ஆட்டத்தினால் மிகப்பெரிய இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், கேப்டனாக பொறுப்பற்ற முதல் போட்டியே தோல்வியடைந்தது குறித்து பேசிய பும்ரா, 'மூன்று நாட்கள் சிறப்பானதாக அமைந்திருந்தாலும் துடுப்பாட்டத்தினால் வீழ்ந்தோம். அதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகு. எதிரணியினரை உள்ளே அனுமதித்ததில் தான் போட்டி எங்களிடம் இருந்து நழுவியது.
ஒருவேளை மற்றும் ஆனால் போன்ற வார்த்தைகள் எப்போதும் இருக்கும். நீங்ககள் திரும்பி சென்று பார்த்தால், ஒருவேளை மழை பெய்யாமல் இருந்திருந்தால் தொடரையே வென்றிருப்போம். ஆனால் இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது.
PC: Twitter
எனினும், இந்த தொடரை சமன் செய்துள்ளோம். இரு அணிகளும் மிக சிறப்பாக விளையாடிது. இது நியாயமான முடிவு தான். கேப்டன் பொறுப்பை முழுமையாக அனுபவித்தேன், தேசிய அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியாக இருந்தது' என தெரிவித்துள்ளார்.
மேலும், ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்டனர் எனவும் பும்ரா பாராட்டினார்.
PC: Twitter