அம்பானி திருமணத்தில் பிடித்த பிரபலம் இவர் தான்.., பும்ரா சொன்ன ருசிகரமான பதில்
மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தனக்கு பிடித்த பிரபலத்தை பற்றி கூறியுள்ளார்.
ஆனந்த் அம்பானி திருமணம்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை வந்தனர்.
தமிழ் பிரபலங்களான ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பம், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, அட்லீ மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதோடு, கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அந்தவகையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவும் அம்பானி திருமணத்தில் கலந்து கொண்டார்.
பிடித்த பிரபலம் யார்?
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அம்பானி வீட்டு திருமணத்தில் உங்களுக்கு பிடித்த பிரபலம் யார் என்று ஜஸ்ப்ரித் பும்ராவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "அம்பானி வீட்டு திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது எனக்கும் மிகவும் பிடித்த தருணம். அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அவரை சந்தித்தது மகிழ்ச்சி" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |