நிலத்தை பிய்த்துக்கொண்டு பறந்த ஸ்டம்புகள்! மேற்கிந்திய தீவுகளை நொறுக்கிய பும்ராவின் வீடியோ
இந்திய அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 162 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
சரிந்த விக்கெட்டுகள்
அகமதாபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடியது.
Two fiery deliveries, two similar results 🔥🔥
— BCCI (@BCCI) October 2, 2025
Jasprit Bumrah, you absolute beauty!#TeamIndia @IDFCfirstbank | @Jaspritbumrah93 pic.twitter.com/JNcPGJxK8I
இந்திய அணியின் பும்ரா, சிராஜ் ஆகியோரின் தாக்குதல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் 44.1 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த மேற்கிந்திய தீவுகள் அணி 162 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பந்துவீச்சில் தாக்குதல் நடத்திய பும்ராவின் ஓவரில், கிரேவ்ஸ் (32) மற்றும் லேனே (1) ஆகிய இருவரும் கிளீன்போல்டாகினர். அப்போது ஸ்டம்புகள் பறக்க மைதானமே ஆர்ப்பரித்தது.
சிராஜ் 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |