இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வெடுக்க போகும் இந்திய வீரர்? யார் அவர்
இங்கிலாந்துக்கு எதிரான 4 -வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதில் முடிவடைந்த 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
பும்ராவிற்கு ஓய்வு?
இதனையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான 4 -வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் திகதி ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் உள்ள ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பணிச்சுமை காரணமாக 2 -வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 4 -வது டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ராவிற்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 4 -வது போட்டியின் முடிவை பொருத்து தான் அவர் கடைசியில் போட்டியிலும் இடம் பிடிப்பாரா என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |