சதம் விளாசிய மார்க்கரம்! 2வது நாளிலேயே கதையை முடித்த பும்ரா..இந்தியா மிரட்டல் வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுருண்ட தென் ஆப்பிரிக்கா
கேப்டவுனில் நடந்த இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 55 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
ICC (twitter)
எய்டன் மார்க்கரம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் பும்ராவின் பந்துவீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன.
மார்க்கரம் சதம்
ஜோர்சி, ஸ்டம்ப்ஸ், வெரின்னே ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். ஆனால் மார்க்கரம் அதிரடியாக 6வது டெஸ்ட் சதம் அடித்தார்.
அவர் 103 பந்துகளில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
Twitter (@Sportskeeda)
அதன் பின்னர் பிரசித் ஓவரில் ரபடாவும், பும்ரா ஓவரில் இங்கிடியும் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி 176 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பும்ரா அபாரம்
இந்திய அணியின் தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும், பிரசித் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்ததாக 79 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஆட்டநாயகன் விருதை சிராஜ் வென்றார். தொடர் நாயகன் விருதை பும்ரா மற்றும் டீன் எல்கர் ஆகிய இருவரும் வென்றனர்.
ICC (twitter)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |