தித்திக்கும் சுவையில் பன் மஸ்கா.., எப்படி செய்வது?
பன் மஸ்கா என்பது பாரம்பரியமான மற்றும் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி ஆகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் இந்த சுவையான பன் மஸ்காவை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பன் மஸ்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பன்- 2
- வெண்ணெய்- 100g
- கன்டென்ஸ்டு மில்க்- 2 ஸ்பூன்
- பால்- 1கப்
- பாதாம்- 10
- முந்திரி- 3
- பிஸ்தா- 6
- சர்க்கரை- 1 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- குங்குமப்பூ- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பாதாம், முந்திரி, பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் வெண்ணை மற்றும் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து சூடானதும் அதில் அரைத்த பொடி, சர்க்கரை மற்றும் குங்கும பூ சேர்த்து நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து எடுத்துவைத்த பன்களை இரண்டாக வெட்டி அதன் நடுவில் கலந்துவைத்த வெண்ணையை தடவிக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு தட்டில் பன்னை நான்காக வெட்டி அதன்மேல் தயார் செய்து வைத்த பாதாம் பாலை சேர்த்தால் சுவையான பன் மஸ்கா தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |