பிரித்தானியாவில் எரிவாயு வெடிப்பில் முற்றிலும் அழிந்த பங்களா
பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயரில் பங்களா ஒன்று எரிவாயு வெடிப்பில் சிதறியது.
பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயரில் உள்ள மில்டன் கெய்ன்ஸுக்கு அருகிலுள்ள நியூட்டன் லாங்வில்லில் இருந்த பங்களா ஒன்று எரிவாயு வெடிப்பில் சிதறியது.
செங்கற்களும், இடிபாடுகளும்
பக்கிங்ஹாம்ஷயரில் உள்ள மில்டன் கெய்ன்ஸுக்கு அருகிலுள்ள நியூட்டன் லாங்வில்லில், மாபெரும் எரிவாயு வெடிப்பில் பங்களா ஒன்று வெடித்தது. அதில் செங்கற்களும், இடிபாடுகளும் எல்லா இடங்களிலும் சிதறின.

சந்தேகத்திற்கிடமான இந்த எரிவாயு வெடிப்பில் அந்த பங்களா முற்றிலுமாக அழிந்ததாக தெரிய வந்துள்ளது.
அதே சமயம் பங்களாவின் அருகிலுள்ள வீடுகளையும், கார்களையும் சிதறிய செங்கற்கள் சேதப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மிகவும் பயங்கரமானது
இந்த விபத்தில் பங்களாவில் வசித்து வந்ததாக நம்பப்படும் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், அவரது நாய் ஒன்று கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால சேவைகளால் சிகிச்சை அளிக்கப்பட்ட உள்ளூர் மதுபான விடுதியில் குடியிருப்பாளர்கள் கூடியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர், இந்த எரிவாயு வெடிப்பை 'மிகவும் பயங்கரமானது' என்று விவரித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |